வெள்ளம்; சிலாங்கூர் மீது பிரதமர் குற்றச்சாட்டு

கோலா­லம்­பூர்: கடந்த வாரம் ஏற்­பட்ட வெள்­ளத்­தில் சிலாங்­கூர் மாநி­லம் மிக மோச­மாக பாதிக்­கப்­பட்­டது. இதற்கு அந்த மாநி­லம் ஆயத்த நிலை­யில் இல்­லா­ததே கார­ணம் என்று மலே­சிய பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் குற்­றம் சாட்­டி­யுள்­ளார்.

சிலாங்­கூர் மெது­வா­கச் செயல்­பட்டதால் அதிக இழப்பு ஏற்­பட்­டுள்­ளது என்று பிர­த­மர் கூறி­னார்.

கடந்த மாதம் மலே­சி­யா­வில் வர­லாறு காணாத மழை பெய்ததால் நாட்டின் பல இடங்­கள் வெள்­ளத்­தில் மூழ்­கின. நேற்று சிறப்பு நாடா­ளு­மன்­றக் கூட்­டத்­தில் பேசிய பிர­த­மர் இஸ்­மா­யில் பேரி­டர் நிர்­வா­கத்­தைச் சுற்றி உள்ள பிரச்­சி­னை­க­ளைப் பற்றி விளக்­கி­னார்.

சிலாங்­கூ­ரின் மாநில, மாவட்ட அள­வி­லான பேரி­டர் நிர்­வா­கத்­தில் பல­வீ­னங்­கள் இருந்­தன. இத­னால் நான் தலை­யிட வேண்­டிய கட்­டா­யம் ஏற்­பட்­டது என்று பிர­த­மர் தமது தொடக்­க­வுை­ர­யில் தெரி­வித்­தார்.

திரு இஸ்­மா­யில் தலை­மை­யி­லான மத்­திய அர­சாங்­க­மும் முதல்­வர் அமி­ரு­டின் ஷாரி தலை­மை­யி­லான சிலாங்­கூர் மாநில அர­சாங்­க­மும் வெள்­ளத்­தில் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை மீட்­ப­திலும் உதவி செய்­வ­தி­லும் மெது­வா­கச் செயல்­பட்­ட­தாக இரு தரப்­பி­ன­ரும் குற்­றம் சாட்டி வரு­கின்­றனர்.

“சிலாங்­கூ­ரின் வெள்ள நிர்­வா­கம் 2வது, 3வது நாளி­லும் மேம்­ப­ட­வில்லை. இது அதி­ருப்­திக்கு வழி வகுத்­தது.” என்று திரு இஸ்­மா­யில் குறிப்­பிட்­டார்.

இதற்­கி­டையே வெள்­ளத்­தில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உதவ இரண்டு பில்­லி­யன் ரிங்­கிட்­டுக்கு மேல் செல­வாகும் என்று நிதி­ அமைச்சர் சஃப்ருல் அப்­துல் அஸிஸ் தெரி­வித்­துள்­ளார்.

“பேரி­டர் நிவா­ர­ணத்துக்கு 1.4 பில்­லி­யன் ரிங்­கிட் மதிப்­புள்ள உத­வியை பிர­த­மர் அறி­வித்திருந்தார். ஆனால் பல்­வேறு உத­வி­க­ளுக்­கான செல­வு­கள், சேத­ம­டைந்த வீடு­கள் மற்­றும் பொது வச­தி­களை சீர் ­படுத்­து­வ­தற்­கான தேவை ஆகி­ய­வற்­றின் அடிப்­ப­டை­யில் இந்­தத் தொகை 2 பில்­லி­யன் ரிங்­கிட்­டை தாண்­டி­யுள்­ளது,” என்று நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் நிதி அமைச்­சர் தெரி­வித்­தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!