பயணிகள் தனிமைக் காலம் குறைப்பு: மலேசியா

பயணிகள் தனிமைக் காலம் குறைப்பு: மலேசியா

1 mins read
3afed7eb-7325-4505-8248-d5957728fa32
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பயணிகளின் வருகை (படம்: ராய்ட்டர்ஸ்) -

மலேசியாவுக்கு வருகையளிக்கும் பயணிகள் கூடுதல் தடுப்பூசி போட்டிருந்தால் ஐந்து நாட்கள் மட்டுமே தனிமைப்படுத்திக்கொண்டால் போதும் என அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

முழுமையாக தடுப்பபூசி போட்டுக்கொண்டோர் ஏழு நாட்களும், பாதி தடுப்பூசி அல்லது தடுப்பூசியே போடாதவர்கள் பத்து நாட்களும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சு தெரிவித்தது.

இந்த புதிய விதிமுறைகள் மலேசியர்களுக்கும் வெளிநாட்டவருக்கும் பொருந்தும். விதிமுறைகள் இம்மாதம் 24ஆம் தேதி நடைமுறைக்கு வரும்.

அதோடு, மலேசியாவுக்கு செல்லும் வெளிநாட்டவருக்கு வீட்டிலிருப்பதை கண்காணிக்க மின்னியல் முறையில் உத்தரவு கண்காணிக்கும் உத்தரவு பிறப்பிக்கப்படும்.

முன்னதாக, அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளும் காலத்துக்கு ஒரு கண்காணிப்பு மணிக்கட்டையை அணிந்திருக்க வேண்டும்.

ஆனால், கொவிட் தொற்று அதிகமாக இருக்கும் நாடுகளிலிருந்து வருவோர் மின்னியல் கண்காணிப்பு கருவிகளைத் தொடர்ந்து அணியவேண்டும் என சுகாதார அமைச்சர் கைய்ரி ஜமாலுதீன் கூறினார்.

வெளிநாட்டு வருகையாளர்களை மற்ற நாடுகள் கையாளும் முறையை ஆராய்ந்த பிறகு, அதுகுறித்து மலேசியாவில் மறுஆய்வு செய்யப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இருப்பினும், மலேசியாவுக்கு வரும் அனைத்து பயணிகளும் தொடர்ந்து பிசிஆர் சோதனையை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் கூறினார்.