கட்டாயத் தடுப்பூசி சட்டத்திற்கு ஆஸ்திரிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது

வியன்னா: அடுத்த மாதம் முதல் பெரி­ய­வர்­க­ளுக்­கு கொவிட்-19க்கு எதி­ரான தடுப்­பூ­சி­யைக் கட்­டா­ய­மாக்க ஆஸ்­தி­ரிய நாடா­ளு­மன்­றம் ஒப்­பு­தல் அளித்­துள்­ளது.

இதை­ய­டுத்து, ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­களில் தடுப்­பூ­சி­யைக் கட்­டா­ய­மாக்­கி­யுள்ள முதல் நாடா­னது ஆஸ்­தி­ரியா.

183 உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட நாடா­ளு­மன்­ற­த்­தில், இச்­சட்­டத்­திற்கு ஆத­ர­வாக 137 பேரும் எதி­ராக 33 பேரும் வாக்­க­ளித்­த­னர். வலதுசாரி­யி­னர் தவிர ஏனை­யோர் ஆத­ர­வளித்­த­னர்.

நாட்­டில் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்­கும் வகை­யில், இந்த கட்­டா­யத் தடுப்­பூசி திட்­டம் சென்ற நவம்­பர் மாதம் அறி­விக்­கப்­பட்­டது.

இதற்கு எதிர்ப்பு தெரி­வித்து, மக்­கள் அங்கு தொடர் ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்டு வரு­வ­தற்கு மத்­தி­யில் இது சட்­ட­மாக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, பிப்­ர­வரி 2ஆம் தேதி முதல் கிரு­மிப் பர­வல் கட்­டுப்­பா­டு­களை பிரான்ஸ் படிப்­ப­டி­யா­கத் தளர்த்­த­வுள்­ளது.

ஓமிக்­ரான் தொற்­றுச் சம்­ப­வங்­கள் குறை­யத் தொடங்­கி­யுள்­ள­தால், தளர்­வு­கள் அறி­விக்­கப்­ப­டு­வ­தாக அதன் பிர­த­மர் ஜீன் கேஸ்­டெக்ஸ் சொன்­னார்.

இதன்­படி, உள்­ள­ரங்­கு­களில் கூடு­வ­தற்கு இனி எண்­ணிக்கை கட்­டுப்­பாடு கிடை­யாது. வெளிப்­புற இடங்களில் யாரும் முகக்­க­வ­சம் அணிய வேண்­டி­யது கட்­டா­ய­ம் கிடையாது.

திங்­கட்­கி­ழமை முதல் உண­வகங்­கள், திரை­ய­ரங்­கு­கள் உள்­ளிட்ட பொது இடங்­க­ளுக்­குச் செல்ல தடுப்­பூசி சான்­றி­தழ் அவ­சி­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது. இது கிரு­மிப் பர­வ­லைக் குறைக்க உத­வும் என்று அவர் சொன்­னார்.

அயர்­லாந்­தி­லும் விரை­வில் அனைத்­துக் கட்­டுப்­பா­டு­களும் தளர்த்­தப்­ப­ட­வுள்­ள­தா­கக் கூறப்­படு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!