படைகளைக் குவிக்கும் ர‌ஷ்யா; பைடன் எச்சரிக்கை

வா‌ஷிங்­டன்: உக்­ரேன் மீதான எந்­த­வொரு நட­வ­டிக்­கை­யும் ர‌ஷ்­யா­வின் ஆக்­கி­ர­மிப்பு செய­லா­கவே எடுத்­துக்­கொள்­ளப்­படும் என்று அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் எச்­ச­ரித்­துள்­ளார்.

உக்­ரேன் எல்­லைப் பகு­தி­யில் ர‌ஷ்யா, ராணு­வத்தை குவித்து வரு­வது உலக நாடு­க­ளி­டையே பதற்­றத்தை ஏற்படுத்தியுள்ளது.

'நேட்டோ' நாடு­கள் கூட்­ட­மைப்­பில் இணைய உக்­ரேன் ஆர்­வ­மாக இருப்­ப­தைத் தொடர்ந்து, கடந்த சில மாதங்­க­ளாக உக்­ரேன், ரஷ்­யா­வுக்கு இடையே மோதல் வலுத்து வரு­கிறது.

இந்த நிலை­யில் கிட்­டத்­தட்ட 100,000 படை­வீ­ரர்­களை உக்­ரேன் எல்­லை­யில் ரஷ்யா நிறுத்­தி­யுள்­ளது. இதன் கார­ண­மாக இரு நாடு­க­ளுக்­கி­டையே போர் சூழல் உரு­வாகி இருக்­கிறது.

இந்த நிலை­யில் ரஷ்­யா­வின் இந்த நட­வ­டிக்­கை­கயை அமெ­ரிக்கா, பிரிட்­டன் ஆகிய நாடு­கள் கடு­மை­யாக விமர்­சித்­துள்­ளன.

இது­கு­றித்து அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் கூறும்­போது, "ரஷ்யா, உக்­ரேனை ஆக்­கி­ர­மிக்கப் பார்க்­கிறது," என்­றார்.

பிரிட்டி‌ஷ் வெளி­யு­ற­வுச் செய­லா­ளர் டுருஸ் கூறும்­போது, "சீனா­வும் ரஷ்­யா­வும் சர்­வா­தி­கா­ரத்தை உல­கம் முழு­வ­தும் ஏற்­று­மதி செய்ய நினைக்­கின்­றன.

"பெரிய தவறு செய்­வ­தற்கு முன்­னர் உக்­ரே­னி­லி­ருந்து ரஷ்ய படை­கள் நிச்­ச­யம் வெளி­யேற வேண்­டும்," என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!