தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நடுவானில் முகக்கவசம் அணிய மறுத்த பயணி; விமானத்தைத் தரையிறக்கிய விமானி

1 mins read
7d2de730-4ece-4bd8-a3df-b60ade99229e
-

வாஷிங்­டன்: அமெ­ரிக்­கா­வின் மையாமி நக­ரி­லி­ருந்து லண்­டன் நோக்­கிச் சென்ற விமா­னத்­தில் பயணி ஒரு­வர் முகக்­க­வ­சம் அணிய மறுத்­த­தைத் தொடர்ந்து அந்த விமா­னம் மீண்­டும் அமெ­ரிக்­கா­விற்கே திரும்­பி­யது.

அமெ­ரிக்­கன் ஏர்­லைன்ஸ் விமா­னம் மையா­மி­யில் இருந்து 129 பயணி­கள், 14 பணி­யா­ளர்­க­ளு­டன் வியா­ழ­னன்று லண்­ட­னுக்குப் புறப்­பட்­டது.

அதில் விதியை பின்­பற்­றா­மல் ஒரு பயணி முகக்­க­வ­சம் அணிய மறுத்­துள்­ளார். பய­ணி­கள் சிலர் அதற்கு எதிர்ப்பு தெரி­வித்தனர்.

கிருமிப் பரவல் அச்­சு­றுத்­தல் இருப்­ப­தால் பய­ணி­கள் கண்­டிப்­பாக முகக்­க­வ­சம் அணிய வேண்­டும் என விமா­னப் பணி­யா­ளர்­கள் அந்த பய­ணி­யி­டம் எவ்­வ­ளவோ எடுத்­துக் கூறி­யும் அவர் கேட்­க­வில்லை.

பயணி தனது நிலைப்­பாட்­டில் பிடி­வா­த­மாக இருந்­த­தால், விமானி உட­ன­டி­யாக விமா­னத்தை மையாமி விமான நிலை­யத்­திற்குத் திருப்­பி­னார்.

விமா­னம் தரை­யி­றங்­கி­ய­தும் முகக்­க­வ­சம் அணிய மறுத்த அந்த பய­ணியை போலி­சார் அழைத்­துச் சென்­ற­னர்.

இந்த சம்­ப­வம் தொடர்­பாக விசா­ரணை நடத்­தப்­பட்டு வரு­வ­தா­க­வும் சம்­பந்­தப்­பட்ட பய­ணியை விமா­னப் பய­ணத்­திற்கு தடை செய்­யப்­பட்ட பட்­டி­ய­லில் சேர்த்­தி­ருப்­ப­தா­க­வும் விமான நிறு­வ­னம் கூறியுள்­ளது.