ஏமன் மீதான தாக்குதலில் பலர் பலி

சாடா: ‌ஏமன் தடுப்பு முகாம் மீது சவூதி தலை­மை­யி­லான கூட்­டுப்­படை நடத்­திய தாக்­கு­த­லில் குறைந்­தது 60 பேர் மாண்­டு­விட்­ட­னர்.

ஹுதி படை­யின் சுகா­தார அமைச்­சர் தாஹா அல்-மோட்­ட­வா­கல் இதனை உறு­திப்­ப­டுத்­தி­னார்.

ஆப்­பி­ரிக்க அக­தி­கள் உட்­பட பலர் மாண்­டு­விட்­ட­தாக ராய்ட்­டர்ஸ் செய்தி கூறு­கிறது.

ஹெடை­டா­வில் நடந்த தாக்­கு­தலில் மூன்று பிள்­ளை­கள் மாண்டு­விட்­ட­தாக 'சேவ் தி சில்­ரன்' அமைப்பு கூறி­யது.

பலர் படு­கா­ய­ம­டைந்­துள்­ள­தால் உயி­ரி­ழப்பு அதி­க­ரிக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

சவூதி வான்­வ­ழித் தாக்­கு­தலால் நிகழ்ந்த இச்­சம்­ப­வத்­திற்கு ஐநா சபை தலைமைச் செயலாளர் தலை­வர் அன்­டோ­னியோ குட்­ட­ரெஸ் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளார்.

"தெற்­குப் பகு­தி­யில் உள்ள ஹொடை­டா­வில் இருக்­கும் தொலைத்­தொ­டர்பு மையத்­தின் மீது கூட்­டுப்­ப­டை­யி­னர் மேற்­கொண்ட தாக்­கு­த­லில், ஏமன் முழு­வ­தும் இணை­யச் சேவை முடங்­கி­ய­து," என குட்­ட­ரெ­ஸின் செய்­தித் தொடர்­பா­ள­ரான டுஜ­ரிச் சொன்­னார்.

இந்த சம்­ப­வங்­கள் தொடர்­பாக உட­னடி, வெளிப்­ப­டை­யான விசா­ர­ணை­கள் நடத்­தப்­பட வேண்­டும் என்று குட்­ட­ரெஸ் அழைப்பு விடுத்­துள்­ளார்.

அமெ­ரிக்கா வெளி­யு­றவு அமைச்­சர் பிளிங்­கன் வெளி­யிட்ட அறிக்­கை­யில், மோதல்­கள் பெருங் கவலை அளிப்­ப­தா­கக் கூறி­னார். அத்­து­டன் மோத­லைத் தணிக்க அனைத்து தரப்­பு­க­ளுக்­கும் அவர் அழைப்பு விடுத்­தார்.

இதற்­கி­டையே, சவூதி கூட்­டுப்­படை ஏமன் தடுப்பு முகாமை குறி வைத்து தாக்­கு­தல் நடத்­தி­ய­தா­கக் கூறப்­ப­டு­வது உண்­மை­யல்ல என்று சவூ­தி­யின் அதி­கா­ர­பூர்வ ஊட­க­மான எஸ்­பிஏ கூறி­யுள்­ளது.

ஐக்­கிய அரபுச் சிற்­ற­ர­சு­க­ளின் தலை­ந­க­ர­மான அபு­தாபி மீது ஹுதி கிளர்ச்­சிப் படை­யி­னர் ஆளில்லா விமா­னங்­கள் மூலம் சென்ற திங்­கட்­கி­ழமை தாக்­கு­தல் நடத்தினர்.

அதன் பிறகு, ஹுதி கிளர்ச்சி இயக்­கத்­து­டன் தொடர்­பு­டை­ய­தாக சந்­தே­கிக்­கப்­படும் ஏமனில் உள்ள இலக்­கு­கள் மீது சவூதி கூட்­டுப்­படை தாக்­கு­தல்­களைத் தீவி­ரப்­படுத்­தி­யுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!