‘பயணிகளுக்கு ஆன்டிஜென் பரிசோதனை போதும்’

சிட்னி: ஆஸ்­தி­ரே­லியா செல்­லும் அனைத்­து­லக விமா­னப் பய­ணி­கள் இனி ஆன்­டி­ஜென் பரி­சோ­தனை மூலம் கிரு­மித்­தொற்று இல்லை என்­பதை உறுதி செய்­தால் போதும் என்று கூறப்­பட்­டுள்­ளது. புறப்­ப­டு­வ­தற்கு 24 மணி நேரத்­திற்கு முன்பு எடுக்­கப்­பட வேண்­டும்.

புறப்­ப­டு­வ­தற்கு 24 மணி நேரத்­திற்கு முன்பு, அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட விமான நிலைய பரி­சோ­தனை மையத்­தில் பரி­சோ­த­னையை மேற்­கொள்ள வேண்­டும் என்று சுகா­தார அமைச்சு கூறியது. இது ஞாயிறு நள்­ளி­ரவு 1 மணி முதல் நடப்­புக்கு வந்­தது.

இது­வரை, புறப்­ப­டு­வ­தற்கு மூன்று நாள்­கள் முன்பு பிசி­ஆர் பரி­சோ­தனை மேற்­கொள்ள வேண்­டும் என்று இருந்­தது. பிசிஆர் ­ப­ரி­சோ­தனை மேற்கொள்­வதில் உள்ள சிர­மங்­களுக்கு மத்­தி­யில் ஆஸ்­தி­ரே­லியா இந்த மாற்­றத்­தைக் கொண்டு வந்­துள்­ளது.

இதற்­கி­டையே, ஓமிக்­ரான் பர­வல் மோச­ம­டைந்­தி­ருந்­தா­லும் பள்­ளிக்­கூ­டங்­கள் திறக்­கப்­ப­டு­வது ஒத்­தி­வைக்­கப்­ப­டாது என்று ஆஸ்­தி­ரே­லி­யா­வின் நியூ சவுத் வேல்ஸ் மாநி­லம் அறி­வித்­துள்­ளது.

ஆனால் குயின்ஸ்­லாந்­தில் இன்னும் இரண்டு வாரங்களில் கிரு­மி பர­வல் உச்­ச­ம­டை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தால், அங்கு பள்­ளிக்­கூ­டங்­கள் திறக்­கப்­ப­டு­வது இரண்டு வாரங்­க­ளுக்கு ஒத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!