அதிக மதிப்பெண் பெற்ற குற்றவாளிக்கு உதவித்தொகை

அதிக மதிப்பெண் பெற்ற குற்றவாளிக்கு உதவித்தொகை

1 mins read
79792519-8fec-4612-9f7f-76aa236283e6
-

கராச்சி: கொலை குற்­றத்­திற்­காக கராச்சி சிறை­யில் ஆயுள் தண்­டனை அனு­ப­வித்து வரும் பாகிஸ்­தான் கைதி ஒரு­வர், உயர்­நி­லைப் பள்­ளித் தேர்­வில் அதிக மதிப்­பெண் பெற்­றுள்­ளார்.

சென்ற ஆண்டு நடந்த இத்­தேர்­வில், 35 வய­தான சையத் நயீம் ஷா என்­ப­வர் பெற்ற வெற்­றி­யைத் தொடர்ந்து, அவ­ருக்கு பாகிஸ்­தா­னின் பட்­ட­யக் கணக்­கா­ளர்­கள் கல்வி நிறு­வ­னத்­தின் மேற்­ப­டிப்பு உத­வித்­தொகை கிடைத்­துள்­ளது.

தேர்­வில் முதல் நான்கு இடங்­களைப் பிடிப்­ப­வர்­க­ளுக்கு ஒரு மில்­லி­யன் ரூபாய் (7,600 சிங்­கப்­பூர் வெள்ளி) உத­வித்­தொகை வழங்­கப்­படும் என்று கல்வி நிறு­வன அதி­காரி ஒரு­வர் சொன்­னார்.

"நான் சிறை­யில் சிர­மப்­பட்­டேன். இருப்­பி­னும், தண்­டனை கிடைக்­க­வில்லை என்­றால் இது சாத்­தி­ய­மாகி இருக்­காது," என்­றார் ‌ஷா.

சிறை­யில் பாடம் நடத்­தும் முன்­னாள் கைதி­கள் தான் தேர்­வுக்­குத் தயா­ராக ஊக்­கு­வித்த­தாக அவர் சொன்­னார்.

"கராச்சி மத்­திய சிறைச்­சா­லை­யில், கல்வி பயி­லும் 1,200 கைதி­களில் ஒரு­வ­ரான ‌ஷாவின் இந்த வெற்­றிக்கு இணையே இல்லை," என்­றார் சிறை கண்­கா­ணிப்­பா­ளர் சாயித் சூமரோ.

2010ல் தனிப்­பட்ட பிரச்­சினை கார­ண­மாக ஒரு­வ­ரைக் கொலை செய்ததற்காக ‌ஷாவிற்கு 2018ஆம் ஆண்டு ஆயுள் தண்­டனை (25 ஆண்டு) விதிக்­கப்­பட்­டது.