தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது: மகாதீரின் மகள் அறிக்கை

தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது: மகாதீரின் மகள் அறிக்கை

1 mins read
570e2b9c-943b-4e18-93f1-2a5d7904f348
-

கோலா­லம்­பூர்: மீண்­டும் தேசிய இத­ய­நோய் கழகத்தில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள மலே­சிய முன்­னாள் பிர­த­மர் மகா­தீர் முக­ம­து­வின் உடல்­நிலை சீராக உள்­ள­தாக அவ­ரது மகள் மரினா சொன்­னார்.

"ஜன­வரி 8ஆம் தேதி மேற்­கொள்­ளப்­பட்ட சிகிச்­சை­யைத் தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்­க­ளாக அவர் தேசிய இத­ய­நோய் கழகத்தில் சிகிச்சை பெற்று வரு­வ­தா­க­வும் அவர் வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­

தது.

96 வய­தா­கும் மகா­தீர், இச்­சிகிச்­சைக்­குப் பிறகு ஜன­வரி 13ஆம் தேதி மருத்­து­வ­ம­னை­யில் இருந்து வீடு திரும்­பி­னார்.

இந்நிலையில், மீண்டும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் டாக்­டர் மகா­தீர் முக­ம­து­வைப் பார்ப்­ப­தற்­காக, மலே­சிய பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் நேற்று பிற்­ப­கல் தேசிய இத­ய­நோய் கழகத்துக்குச் சென்­றார்.

மகா­தீர் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருக்­கும் செய்­தி­யைக் கேட்டு செய்­தி­யா­ளர்­களும் இதயநோய் கழக வளாகத்தில் குவிந்தனர்.