மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய தலைவரைக் கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

கோலா­லம்­பூர்: ஊழல் சர்ச்­சைக்­குள்­ளா­கி­யி­ருக்­கும் மலே­சிய ஊழல் தடுப்பு ஆணை­யத்­தின் தலை­வர் அசாம் பாக்­கி­யைக் கைது செய்ய கோரி மலே­சிய மக்­கள் நேற்று பேரணி சென்­ற­னர்.

பங்­சார் எல்­ஆர்டி நிலை­யம் அருகே இந்த பேரணி நடத்­தப்­பட்­டது. இதை­ய­டுத்து அவ்­வி­டத்­திற்­குச் செல்­வ­தற்­கான சாலை­கள் மூடப்­பட்­டன. இத­னால் அப்­ப­கு­தி­யைச் சுற்றிலும் போக்­கு­வ­ரத்து நெரி­சல் ஏற்­பட்­டது.

இருப்­பி­னும் நேற்று காலை 10.30 மணி­யி­லி­ருந்தே குறிப்­பிட்ட இடத்­தில் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் கூடத் தொடங்­கி­னர். அரசியல் கட்சிகளின் இளையர் பிரிவுத் தலைவர்களும் இதில் கலந்துகொண்டனர்.

பொது நிறுவனப் பங்குகளை அதிக அளவில் வாங்கியதில் சர்ச்சையில் சிக்கியுள்ள அசாமைக் கைது செய்யக் கோரி அவர்கள் பேரணி சென்றனர்.

ஜாலான் பங்­சா­ரின் இறு­தி­வரை அணி­வ­குத்­துச் செல்ல மட்­டுமே போலி­சார் அனு­ம­தித்­த­னர். ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் தொடர்ந்து முன்­னேறி செல்­வ­தைத் தடுக்க ஜாலான் டிரா­வர்ஸ்-பங்­சார் சந்­திப்­பில் கல­கத் தடுப்பு போலி­சார் அணி­வ­குத்­தி­ருந்­த­னர்.

இதற்கு உடன்பட்ட ஆர்ப்பாட்டக் காரர்கள் பங்­சார் எல்­ஆர்டி நிலை­யத்­திற்­குத் திரும்­பு­வ­தற்கு முன், கிட்டத்தட்ட 15 நிமி­டங்­களுக்கு அங்­கேயே அமர்ந்து ஆர்ப்பாட்ட த்தில் ஈடு­பட்­ட­னர். அவர்கள் கலைந்து சென்ற பிறகு தடுப்­பு­கள் அகற்­றப்­பட்­டன. ஜாலான் பங்­சார், ஜாலான் டிரா­வர்­ஸில் மதி­யம்

1 மணிக்குப் போக்­கு­வ­ரத்து மீண்­டும் இயல்­பு­நி­லைக்­குத் திரும்­பி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!