அடிக்கடி கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்வதைவிட, ஆண்டுக்கு ஒருமுறை போட்டுக்கொள்வது மேலாக இருக்கும் என்று ஃபைசர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அல்பர்ட் போர்லா கூறியுள்ளார்.
இஸ்ரேலிய ஊடகத்துக்கு அளித்த பேட்டியின்போது, இனி நான்கு, ஐந்து மாதங்களுக்கு ஒரு முறை தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் ஆகுமா என்று அவரிடம் கேட்கப்பட்டது. அது நல்லது அல்ல என்றும் ஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசி போட்டுக் கொள்வதைப் போன்ற சூழல் அமைவதே தமது விருப்பம் என்றும் சொன்னார்.

