'டோங்கா எரிமலை வெடிப்பு ஹிரோ‌ஷிமாவைவிட பலநூறு மடங்கு மோசமானது'

'டோங்கா எரிமலை வெடிப்பு ஹிரோ‌ஷிமாவைவிட பலநூறு மடங்கு மோசமானது'

1 mins read
0d80ad93-27c9-48c0-b6ce-105f0be7df49
-

டோங்கா எரிமலை வெடிப்பு, ஜப்பானின் ஹிரோஷிமா மீது வீசப்பட்ட அணுகுண்டு வெடிப்பைவிட பலநூறு மடங்கு சக்திவாய்ந்தது என்று நாசா ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இம்மாதம் 15ஆம் தேதியன்று, டோங்காவில் கடலடி எரிமலைத் தீவு வெடித்தபோது, வானத்தில் 40 கிலோமீட்டர் உயரம்வரை சாம்பலைக் கக்கியதாக நாசா கூறியது.

கிட்டத்தட்ட ஐந்திலிருந்து 30 மில்லியன் டன் டிஎன்டி வெடிமருந்து அளவுக்கான மின்சக்தி, அந்த எரிமலை வெடிப்பின்போது வெளியானது.

ஒப்புநோக்க, 1945ல் இரண்டாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பின் அளவு 15,000 டன் டிஎன்டி மட்டுமே.

எரிமலை வெடிப்பு உருவாக்கிய பேரலைகள், பெரு அருகே எண்ணெய்க் கப்பல் மீது மோதியதில் கடலில் பெரும் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளது. அதனால் பெருவில் சுற்றுச்சூழல் பேரிடர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.