ஒரு வரி உலகச் செய்திகள்

ஒரு வரி உலகச் செய்திகள்

1 mins read
9b283027-c6ba-440d-b5f0-4dd43535ffa9
-

 ஏமனின் ஹூதி இயக்கத்தினர் அபுதாபியை நோக்கி ஏவிய இரண்டு ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக ஐக்கிய அரபுச் சிற்றரசு தெரிவித்துள்ளது.

 உக்ரேன் எல்லையில் ரஷ்யா பீரங்கிகள், ஏவுகணைகள் ஆகியவற்றுடன் தமது படைகளையும் குவித்து வருவதால், உக்ரேனில் உள்ள தங்கள் நாட்டுத் தூதரக அதிகாரிகளை உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்காவும் பிரிட்டனும் கேட்டுக் கொண்டுள்ளன. மேலும், ர‌ஷ்யாவிற்குப் பதிலடி கொடுப்பதற்கு ஏதுவாக, கப்பல்களையும் விமானங்களையும் அனுப்பி உள்ளதாக நேட்டோ கூறியது.

 சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், அடுத்தமாதத் தொடக்கத்தில் காற்றுத் தூய்மைக்கேடு மோசமடையக்கூடும் என்று சீனச் சுற்றுப்புற அமைச்சு எச்சரித்துள்ளது.

 தமது கணவரை விமர்சிக்கும் 'அனைத்து செய்தியாளர்களையும் சிறையில் அடைப்போம்' என்று தென்கொரிய எதிர்க்கட்சியின் அதிபர் வேட்பாளரின் மனைவி மிரட்டியதைத் தொடர்ந்து, அக்கட்சி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.

 ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாள்களாக தொடரும் கடுமையான பனிப்பொழிவால் குறைந்தது 42 பேர் உயிரிழந்தனர், 76 பேர் காயமடைந்ததாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மைத் துறை கூறியது.

 கிருமித்தொற்றுக்கு எதிராக முழுமையாகத் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே பள்ளிவாசலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.