'தீவிரவாதிகளிடம் மனிதக் கேடயமாக 600 சிறுவர்கள்'

'தீவிரவாதிகளிடம் மனிதக் கேடயமாக 600 சிறுவர்கள்'

1 mins read
62dc75aa-d416-4dde-b5f1-a87b3067dd5c
-

பாக்தாத்: வடகிழக்கு சிரியா வில் உள்ள சிறையை ஆக்கிரமித்திருக்கும் ஐஎஸ் தீவிரவாதிகள் 600 சிறுவர் களை மனிதக் கேடயமாக பயன்படுத்துவதாக அமெரிக்க ஆதரவு படையினர் எச்சரித்தனர்.

அச்சிறையிலிருந்து ஐஎஸ் தீவிரவாதிகளை வெளியேற்ற அவர்கள் போராடுகின்றனர்.

ஆனால் தீவிரவாதிகள், சிறையில் இருக்கும் மறுவாழ்வு தடுப்பு மையத்தில் உள்ள சிறுவர்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்திய தால், தங்களால் கடுமையான நடவடிக்கைகளை மேற் கொள்ளமுடியவில்லை என்று படையினர் கூறினர்.