இரண்டு ஆண்டுகளுக்குப் பின் எல்லைகளைத் திறக்கவுள்ள நியூசிலாந்து

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் எல்லைகளைத் திறக்கவுள்ள நியூசிலாந்து

1 mins read
9dbd0f70-9b0d-4021-8846-fe0909806cc7
ஆக்லாந்து விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம். நியூசிலாந்து, திட்டமிட்டபடி அதன் எல்லைகளைக் கட்டம் கட்டமாகத் திறக்கவுள்ளது. படம்: ராய்ட்டர்ஸ் -

நியூசிலாந்து, திட்டமிட்டபடி அதன் எல்லைகளைக் கட்டம் கட்டமாகத் திறக்கவுள்ளது.

முதல் கட்டமாக ஆஸ்திரேலியாவில் வசிக்கும் நியூசிலாந்து மக்கள் நாடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள்.

அவர்கள் ஹோட்டல்களில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் வீட்டில் தனிமை காக்கும் வகையில் விதிமுறைகள் தளர்த்தப்படும்.

முன்னதாக ஜனவரி 17ஆம் தேதி முதல் எல்லைகளைத் திறக்க நியூசிலாந்து அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.

ஏப்ரல் 30ஆம் தேதி முதல் வெளிநாட்டவரை நாட்டுக்குள் அனுமதிக்கவும் அது திட்டமிட்டது.

ஆனால் ஓமிக்ரான் பரவியதை அடுத்து, அதிகமானவர்களுக்குத் தடுப்பூசி போடுவதற்கு அவகாசம் தர, இவற்றுக்கான தேதிகள் தள்ளி வைக்கப்பட்டது.

அனைத்துலக எல்லைகள் திறக்கும் குறிப்பிட்ட தேதியை அடுத்த இரண்டு வாரத்தில் அரசாங்கம் உறுதிசெய்யும் என்று நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கூறினார்.

நியூசிலாந்து எல்லைகள் 2020 மார்ச் மாதத்திலிருந்து மூடப்பட்டுள்ளன.

குடிமக்களும் நிரந்தரவாசிகளும் நாடு திரும்ப அனுமதிக்கப்பட்ட போதும் அவர்கள் ஹோட்டல்களில் தனிமை காக்க வேண்டியிருந்தது.

நியூசிலாந்தில் ஓமிக்ரான் வகைக் கிருமியின் சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளது.

அதை அடுத்து அந்நாட்டு அரசாங்கம் அதன் கிருமிப் பரவல் கட்டுப்பாடுகளை இரண்டு நாள்களுக்கு முன்னர் கடுமையாக்கியது.

ஆனாலும், எல்லைகளைத் திறக்க நியூசிலாந்து தயாராகி வருகிறது.