ஆப்கானிஸ்தானில் கடந்த 20 நாட்களாக கடும் பனிப்பொழிவு கொட்டுகிறது. அதற்கு 42 பலியாகியுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
15 மாநிலங்களில் கொட்டும் பனிப்பொழிவால் சுமார் 2000 வீடுகள் சேதமடைந்தன.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி அளிக்கப்படுவதாக அந்நாட்டின் பேரிடர் நிர்வாக அமைச்சு தெரிவித்தது.
உதவி நல்கும் அமைப்புகளுடன் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிவருவதாக அந்த அமைச்சு கூறியது.
ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான விவகாரங்கள் மோசமடைந்துள்ள நிலையில், அந்நாட்டு மக்களைக் கடும் குளிரும் பனிப்பொழிவும் வாட்டுகின்றன.

