லண்டன்: பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனின் டவுனிங் ஸ்திரீட் இல்லத்தில் முடக்கநிலை உத்தரவு நடப்பில் இருந்தபோது கட்டுப்பாடுகள் மீறப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து பிரிட்டிஷ் போலிசார் விசாரணை நடத்தவுள்ளனர்.
சமூக ஒன்றுகூடல் களுக்குத் தடை விதிக்கப் பட்டிருந்தபோது, பிரதமர் போரிஸ் ஜான்சன் கட்டுப்பாடுகளை மீறி பிறந்தநாள் விழா ஒன்றில் கலந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்காக ஜான்சன் மன்னிப்பு கோரியிருந்தாலும் இது அவரது அரசியல் வாழ்வில் பெரும் சரிவை ஏற்படுத்தும் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்ற னர். பிரதமர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க் கட்சினர் வலியுறுத்தினர்.

