ஒலிம்பிக் போட்டிகள்: பரிசோதனை விதிமுறைகளைத் தளர்த்தியது சீனா

ஒலிம்பிக் போட்டிகள்: பரிசோதனை விதிமுறைகளைத் தளர்த்தியது சீனா

1 mins read
8939ab5a-02ed-4822-9f6c-8a75a4b48dbb
ஒலிம்பிக் ஊழியர்கள், விளையாட்டாளர்கள் என இதுவரை 78 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. படம்: ராய்ட்டர்ஸ் -

பெய்­ஜிங்: பெய்­ஜிங் குளிர்­கால ஒலிம்­பிக் போட்­டி­யில் தொடர்­பு­டைய ஊழி­யர்­கள், விளை­யாட்­டா­ளர்­கள் என பலர் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளாகி வரு­வ­தைத்­தொடர்ந்து, போட்­டிக்­கான கிரு­மித்­தொற்று பரி­சோ­த­னை­களில் சீனா தளர்­வு­களை அறி­வித்­துள்­ளது.

போட்­டித் தொடங்­கு­வ­தற்கு இன்­னும் இரண்டு வாரங்­க­ளுக்­குக் குறை­வான நாள்­களே உள்­ளன. ஜன­வரி 4ஆம் தேதி முதல் ஊழி­யர்­கள் உட்­பட இது­வரை 78 ஒலிம்­பிக் பங்­கேற்­பா­ளர்­க­ளுக்­குக் கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

மேலும் பல­ருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்டு, பங்­கேற்­பா­ளர்­களின் எண்­ணிக்கை குறை­வ­தைத் தடுக்­கும் பொருட்டு, தொற்று பரி­சோ­த­னைக்­கான விதி­மு­றை­களை மாற்­றி­ய­மைப்­ப­தாக ஒலிம்­பிக் அதி­கா­ரி­கள் கூறி­னர்.

அத்­து­டன் தொற்­றுக்கு ஆளா­ன­வ­ரோடு நெருங்­கிய தொடர்­பில் இருந்­த­வர்­கள் ‌ஏழு நாள்­கள் மட்­டும் தனி­மைப்­ப­டுத்திக்­கொண்­டால் போதும் என்­றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. முன்பு இது 14 நாள்­க­ளாக இருந்தது.

மேலும் தாங்­கள் நீக்­கு­ப்போக்­காக இருக்க முயற்­சி செய்வதாகவும் குறிப்­பிட்ட சூழ்­நி­லை­க­ளுக்­கான புதிய விதி­மு­றை­களை உரு­வாக்கி வரு­வ­தா­க­வும் ஒலிம்­பிக் ஏற்­பாட்­டா­ளர்­கள் குழு சொன்­னது.

கிரு­மித்­தொற்றை முற்­றி­லும் ஒழிப்­ப­தில் மும்­மு­ர­மாக இருக்­கும் சீனா அறி­வித்­துள்ள இந்­தத் தளர்வு­கள், ஏற்­கெ­னவே அறி­விக்­கப்­பட்ட சில கடு­மை­யான கட்­டுப்­பாடுகளைப் பின்­பற்­று­வது சாத்­தி­யமற்றது என்­பதை சீனா ஒப்­பு­கொள்­வதைக் காட்­டு­வ­தாக உள்­ளது.