'பிள்ளைகளிடையே ஈடுசெய்ய முடியாத கல்வி இழப்பு'

'பிள்ளைகளிடையே ஈடுசெய்ய முடியாத கல்வி இழப்பு'

1 mins read
397e3c17-1449-4b68-b4aa-1e063a33366d
-

ஜெனீவா: கிரு­மித்­தொற்று கார­ண­மாக பள்ளிகள் தொடர்ந்து மூடப்­பட்­டுள்­ளது, உல­கெங்­கி­லும் உள்ள பிள்ளைகளிடையே கல்­வி­யில் 'ஈடு­செய்ய முடி­யாத' இழப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாக யுனி­செஃப் தெரி­வித்­துள்­ளது.

பள்­ளிக்கூடங்கள் முழு­வ­து­மா­கவோ, ஓர­ளவோ மூடப்­பட்­டி­ருப்­பதால், 616 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான மாண­வர்­கள் இப்­போ­தும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அது கூறி­யது.

அடிப்­படை திறன்­க­ளைக் கற்­றுக்­கொள்ள முடி­யா­த­தோடு, மாண­வர்­க­ளின் மன­ந­ல­மும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. மேலும், பள்ளிக்கூடங்களில் கிடைக்கும் உணவு இல்லாமல், 370 மில்லியன் பிள்ளைகளிடையே ஊட்­டச்­சத்­து குறைபாடும் ஏற்பட்டுள்ளது.

"பள்­ளிக்­கூ­டங்­கள் மீண்­டும் திறக்­கப்­பட்­டால் மட்­டும் போதாது, இழந்த கல்­வியைப் பிள்ளைகள் மீண்­டும் பெற தீவிர ஆதரவு வேண்­டும்," என்­றார் யுனி­செ­ஃப்­பின் கல்­விப் பிரிவு தலை­வர் ராபர்ட் ஜென்­கின்ஸ்.

குறைந்த மற்­றும் நடுத்­தர வரு­மா­னம் உள்ள நாடு­களில், பள்­ளி­கள் மூடப்­பட்­ட­தால், 10 வயது மாண­வர்­களில், 70 விழுக்­காட்­டி­ன­ரால் எளிய உரை­யைப் படிக்­கவோ, புரிந்துகொள்­ளவோ முடி­ய­வில்லை. தொற்­று­நோய்க்கு முன்பு, இது 53 விழுக்­கா­டாக இருந்­தது.