இரவு கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட மோதலில் 18 பேர் பலி

இரவு கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட மோதலில் 18 பேர் பலி

1 mins read
1be47e17-2104-45e8-988a-ecf10b067666
-

இந்தோனீசியாவின் மேற்குப் பாப்புவா பகுதியில் உள்ள சோரோங்கில் இரண்டு கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 18 பேர் மாண்டுவிட்டனர். அங்குள்ள இரவு விடுதி ஒன்றிலும் தீ மூண்டது. ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். மேலும் 17 பேர் தீ விபத்தில் மாண்டனர்.அவர்களின் உடல்கள் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டதாக சோரோங் போலிசார் கூறினர். கருகிய கட்டடம், எரிந்துபோன வாகனங்கள் போன்றவற்றின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

படம்: ஏஎஃப்பி