மலேசியாவின் எல்லைகள் மீண்டும் திறக்கப்படலாம் என அந்நாட்டு பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியுள்ளார்.
அந்த நடவடிக்கை நாட்டின் பொருளியல் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும் என திரு இஸ்மாயில் சொன்னார்.
மேலும், பயனக் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டின் சுற்றுலாத் துறை மீண்டும் மீள இது கைகொடுக்கும் என அவர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டுப் பயணிகளுக்காக மற்ற நாடுகள் தங்கள் கட்டுப்பாடுகளைத் தளர்த்துயுள்ளன. அது போன்று மலேசியாவும் பின்பற்றலாம் என பிரதமர் கருத்துரைத்தார்.
அவ்வாறு செய்வதற்கு முன் நாட்டில் கூடுதல் தடுப்பூசித் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என அவர் கூறினார்.
அந்நாட்டின் சுகாதார அமைச்சுடன் ஆலோசித்த பிறகே இது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மலேசியாவின் எல்லைகள் மார்ச் 2020ஆம் ஆண்டிலிருந்து மூடப்பட்டன.
சிங்கப்பூருக்கும் அந்நாட்டுக்கும் இடையிலான தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணப் பாதையின்கீழ் உள்ள பயணங்கள் மட்டுமே தற்போது செயல்பட்டு வருகின்றன.


