கடும் தடைகள் வரும்: பைடன்

கடும் தடைகள் வரும்: பைடன்

2 mins read
20ea7bf1-41ec-4f57-a902-4986b6a8b38d
உக்ரேனின் லிவிவ் நகருக்கு அருகே அத்தியாவசிய தொழில்கள், சேவைப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் ராணுவப் பயிற்சி பெறுகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ் -

வாஷிங்டன்: ரஷ்யா உக்­ரேன் மீது போர் தொடுக்­கா­மல் இருக்­கும் முயற்­சி­யாக அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் புட்­டி­னுக்கு கடும் எச்­ச­ரிக்­கையை விடுத்­துள்­ளார்.

அதன்­படி, ரஷ்யா உக்­ரேன் மீது படை­யெ­டுக்குமா­னால், தான் புட்­டின் மீது தனிப்­பட்ட முறை­யில் தடை­கள் விதிக்க வேண்­டி­வ­ரும் என்று திரு பைடன் கூறி­யுள்­ளார்.

ரஷ்­யத் தலை­வர் புட்­டின் தனிப்­பட்ட முறை­யில் தடை­களை எதிர்­நோக்க நேரி­டுமா என பத்­தி­ரி­கை­யா­ளர் ஒரு­வர் கேட்ட கேள்­விக்கு பதி­ல­ளித்த அதி­பர் பைடன், "ஆமாம், அது நடக்­கக்­கூ­டி­யதே," என்று தெரி­வித்­தார்.

அமெ­ரிக்கா பொது­வாக ஒரு நாட்­டின் தலை­வர் மீது தனிப்­பட்ட முறை­யில் தடை­கள் விதிக்­கும் பழக்­கம் இல்லை.

ஆனால், உக்­ரேன் எல்­லை­யில் ரஷ்யா குவித்து வைத்­தி­ருக்­கும் 100,000 துருப்­பி­னர் உக்­ரேனை தாக்­கி­னால், இது­வரை இல்­லாத அள­வுக்கு மிகக் கடு­மை­யான பொரு­ளி­யல் தடை­களை அமெ­ரிக்­கா­வும் அதன் நட்பு நாடு­களும் ரஷ்யா மீதும் அந்­நாட்டு தலை­வ­ரான புட்­டின் மீதும் விதிக்­கத் தயா­ராக உள்­ள­தாக அதி­பர் ஜோ பைடன் எச்­ச­ரித்­துள்­ளார்.

உக்­ரேனை தான் தாக்­கப் போவ­தில்லை என்று கூறும் ரஷ்யா, அதற்­குப் பதி­லாக அமெ­ரிக்­கா­வி­ட­மி­ருந்து சில சலு­கை­

க­ளை­யும் உத்­த­ர­வா­தங்­க­ளை­யும் தான் எதிர்­பார்ப்­ப­தா­கக் கூறி­யுள்­ளது. இதில் முக்­கி­ய­மாக உக்­ரேனை அமெ­ரிக்­கா­வும் அதன் நட்பு நாடு­களும் நேட்டோ ராணு­வக் கூட்­ட­ணி­யில் சேர்த்­துக்கொள்­ளக்­கூ­டாது என்ற உத்­த­ர­வா­தத்தை ரஷ்யா கோரு­கிறது. அத்­து­டன், முன்­னாள் சோவி­யத் ரஷ்­யா­வில் அங்­கம் வகித்த மற்ற கிழக்கு ஐரோப்­பிய நாடு­க­ளை­யும் நேட்டோ கூட்­ட­ணி­யில் சேர்த்­துக்­கொள்­வ­தைத் தவிர்க்க வேண்­டும் என்­பது மற்­றொரு ரஷ்­யக் கோரிக்கை.

அதி­பர் ஜோ பைடன் போலவே பிரெஞ்சு அதி­பர் மெக்­ரோ­னும் ரஷ்­யா­வுக்கு கடும் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார். உக்­ரேனை ரஷ்யா தாக்­கி­னால் அத­னால் ஏற்­ப­டக்­கூ­டிய கடு­மை­யான விளை­வு­களை ரஷ்யா சந்­திக்க வேண்­டி­யி­ருக்­கும் என்று அவர் கூறி­னார்.

இந்­நி­லை­யில், உக்­ரேனை ரஷ்யா தாக்­கும் சாத்­தி­யம் அதி­க­ரித்து வரும் வேளை­யில் அதைத் தடுக்க தன்­னால் ஆன முயற்­சி­கள் அனைத்­தை­யும் ரஷ்­யா­வும் அதன் நட்பு நாடு­களும் எடுத்து வரு­கின்­றன.

"உக்ரேன் தாக்கப்பட்டால் அதற்கான விலை மிக அதிகமாக இருக்கும்," என்று திரு மெக்ரோன் கூறினார்.