ஓமிக்ரானை குறிவைத்து புதுவகை தடுப்பூசி

ஓமிக்ரானை குறிவைத்து புதுவகை தடுப்பூசி

1 mins read
c557dfbe-911b-4df2-93de-031e56a98875
-

நியூ­யார்க்: ஓமிக்­ரான் வகை கொவிட்-19 கிரு­மிக்கு எதி­ரான புது­வகை தடுப்­பூ­சி­யைப் பரி­சோ­தித்­துப் பார்ப்­ப­தற்­கான சோத­னைத் திட்­டத்தை தான் தொடங்­கி­யுள்­ள­தாக ஃபைசர்-பயோ­என்­டெக் நிறு­வ­னம் செவ்­வாய்க்­

கி­ழமை தெரி­வித்­தது.

ஏற்­கெ­னவே பயன்­பாட்­டில் உள்ள தடுப்­பூ­சி­கள், ஓமிக்­ரான் திரி­புக்கு எதி­ராக ஓர­ள­வுக்­குத்­தான் பாது­காப்பு வழங்­கு­வ­தா­கக் கூறப்­பட்­டு­வ­ரும் நிலை­யில், ஃபைசர்-பயோ­என்­டெக் இந்த அறி­விப்பை வெளி­யிட்­டுள்­ளது.

அமெ­ரிக்­கா­வில் உள்ள தொண்­டூ­ழி­யர்­க­ளி­டம் இந்­தப் புதிய தடுப்­பூ­சி­யைச் செலுத்தி ஃபைசர்-பயோ­என்­டெக் நிறு­வ­னம் சோதித்­துப் பார்க்­க­வுள்­ளது.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­தோ­ருக்கு மூன்று தவ­ணை­யா­க­வும் ஏற்­கெ­னவே இரு தவணை தடுப்­பூசி போட்­டுக்கொண்டோ­ருக்கு பூஸ்­டர் தடுப்­பூ­சி­யா­க­வும் புதிய தடுப்­பூசி செலுத்­திப் பார்க்­கப்­படும். இந்­தச் சோத­னைத் திட்­டத்­தில் 1,400க்கும் மேற்­பட்­டோர் சேர்ந்­துள்­ள­னர்.

ஓமிக்­ரான் திரி­புக்கு எதி­ராக பாது­காப்பு வழங்­கு­வ­தில் ஏற்­கெ­ னவே உள்ள இரண்டு தவணை தடுப்­பூசி போது­மா­ன­தாக இருக்­காது என்று ஃபைசர் முன்­ன­தாக கூறி­யி­ருந்­தது. என்­றா­லும், மூன்­றா­வது தவணை 'எம்­ஆர்­என்ஏ' தடுப்­பூசி, மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தற்கு எதி­ராக 90 விழுக்­காடு பாது­காப்பு வழங்­கு­வ­தாக அமெ­ரிக்க நோய்க் கட்­டுப்­பாட்டு, தடுப்பு மையம் கூறு­கிறது. இந்நிலையில், இஸ்ரேல் உள்ளிட்ட சில நாடுகள் எற் கெனவே நான்காவது தடுப்பூசி போடத் தொடங்கியுள்ளன.