நெகிழிப் பொருள்களில் ஓமிக்ரான் எட்டு நாள்கள் உயிர்ப்புடன் இருக்கும்

நெகிழிப் பொருள்களில் ஓமிக்ரான் எட்டு நாள்கள் உயிர்ப்புடன் இருக்கும்

2 mins read
8a4bc1d9-4b76-495c-8f33-3e75a4a56e73
தென் அமெரிக்க நாடான சிலியின் சான்டியாகோ நகரில் பிசிஆர் கிருமி பரிசோதனை செய்துகொள்ளும் ஒருவர். படம்: இபிஏ -

தோக்­கியோ: அதி­வி­ரை­வில் பர­வக்­கூ­டிய ஓமிக்­ரான் வகை கொரோனா கிருமி நெகி­ழிப் பொருள்களில் அதி­க­பட்­சம் எட்டு நாட்­களும் மனி­தர்­க­ளின் தோலில் 21 மணி நேர­மும் உயிர்ப்­பு­டன் இருக்­கும் என்று ஓர் ஆய்வு மூலம் தெரி­ய­வந்­துள்­ளது.

இந்த ஓமிக்ரான் கிருமி மற்ற வகை கொரோனா கிரு­மி­கள் உயிர்ப்­பு­டன் இருக்­கும் கால­கட்­டத்­தைக் காட்­டி­லும் அதி­கம் என்று ஆய்­வா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.

ஜப்­பா­னின் கியோட்டோ மருந்­தி­யல் பல்­க­லைக் கழ­கத்­தின் ஆய்­வா­ளர்­கள் குழு இந்த ஆய்வை மேற்­கொண்­டது.

தொடர்ந்து மேற்­கொள்­ளப்­பட்ட பல்­வேறு ஆய்­வ­கச் சோத­னை­யின் முடி­வில் இது தெரி­ய­வந்­துள்­ளது.

ஓமிக்­ரான் கிரு­மித் தொற்று டெல்டா வகைக் கிரு­மி­யைப் போல் அதி­வே­க­மாக பர­வக் கூடி­யது என்­றும் ஆய்­வா­ளர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

ஓமிக்­ரான் வகை கிரு­மித்­தொற்று உலக நாடு­க­ளுக்கு மிகப்­பெ­ரிய அச்­சு­றுத்­த­லாக இருந்து வரு­கிறது.

குறிப்­பாக ஐரோப்­பிய நாடு­களே இந்­தக் கிரு­மி­யால் அதி­கம் பாதிக்­கப்­பட்­டுள்­ளன என்­கிறது ஐரோப்­பிய நோய்த் தடுப்பு மற்­றும் கட்­டுப்­பாட்டு நிலை­யம்.

ஓமிக்­ரான் கிரு­மி­யால் அதி­கம் பாதிக்கப் பட்ட நாடு­க­ளின் வரி­சை­யில் பின்­லாந்து முன்­ன­ணி­யில் உள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

பின்­லாந்து (99.99%), பெல்­ஜி­யம் (99.7%), மால்டா (99.3%), டென்­மார்க் (98.8%) ஆகிய நாடு­களில் புதி­தாக கொரோனா தொற்றால் பாதிக்­கப்­ப­டு­வோரை சோத­னை­யிட்­ட­தில் ஓமிக்­ரான் கிரு­மிப் பாதிப்பே அதி­கம் என்று தெரி­ய­வந்­துள்­ளது.

இருப்­பி­னும் தர­மான கைசுத்­தி­க­ரிப்­பான் பயன்­ப­டுத்­திய 15 நொடி­களில் கொவிட்-19 கிரு­மி­யின் கறை செய­லி­ழந்­து­வி­டும் என்­கின்­ற­னர் ஆய்­வா­ளர்­கள்.

எனவே, உலக சுகா­தார நிறு­வ­னம் பரிந்­துரை செய்­துள்­ள­படி கிரு­மி­நா­சி­னி­க­ளைக் கொண்டு கைக­ளைக் கழு­விக்கொள்­வது உள்­ளிட்ட தொற்­றுப் பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் தொடர்ந்து கடை­ப்பி­டிக்­கப்­பட வேண்­டும் என்று அந்த ஆய்­வா­ளர்­கள் வலி­யு­றுத்­து­

கின்­ற­னர்.