பதிலளித்தாயிற்று, இனி ரஷ்யா பாடு: பிளிங்கன்

பதிலளித்தாயிற்று, இனி ரஷ்யா பாடு: பிளிங்கன்

2 mins read
32a91dff-08ab-42e9-a9db-b1797fb36c5d
-

வாஷிங்­டன்: உக்­ரேன் பிரச்­சினை தொடர்­பில் ரஷ்யா முன்­வைத்த பரந்த அள­வி­லான கோரிக்­கை

­க­ளுக்கு எழுத்­து­பூர்­வ­மான பதில் அளித்­தா­யிற்று, இனி அது ரஷ்யா பாடு என்று அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்­சர் பிளிங்­கன் தெரி­வித்­துள்­ளார். உக்­ரேன் எல்­லை­யில் கடல், தரை­வழி ராணு­வப் பயிற்­சி­களை ரஷ்யா பெரு­ம­ள­வில் மேற்­கொண்­டு­வ­ரும் நிலை­யில் அமெ­ரிக்கா இவ்­வாறு கூறி­யுள்­ளது.

ரஷ்­யா­வுக்­கான அமெ­ரிக்­கத் தூதர் ஜான் சல்­ல­வன் தன் கைப்­பட ரஷ்­யா­வி­டம் கொடுக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­படும் இந்த எழுத்­து­பூர்­வ­மான பதில் ரஷ்யா எழுப்­பி­யி­ருக்­கும் அம்­சங்­க­ளு­டன் அமெ­ரிக்­கா­வும் தனது பங்­குக்கு அமெ­ரிக்க, ஐரோப்­பிய நட்பு நாடு­க­ளின் கவ­லை­கள் பற்­றி­யும் அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தாக திரு பிளிங்­கன் தெரி­வித்­த­தாக ராய்ட்­டர்ஸ் செய்­தித் தக­வல் கூறு­கிறது.

அமெ­ரிக்கா தனது பதி­லில் இந்­தப் பிரச்­சி­னைக்கு அர­ச­தந்­திர வழி­யில் தீர்­வு­கா­ணும் தனது திட்­டத்தை விளக்­கி­யுள்­ள­தா­க­வும் அந்­தத் திட்­டம் ரஷ்­யா­வின் கவ­லை­க­ளுக்கு கொள்கை ரீதி­யான, நடை­மு­றைக்கு சாத்­தி­ய­மான வகை­யில் தீர்­வு­காண்­பதை அடிப்­ப­டை­யா­கக் கொண்­டது என்று திரு பிளிங்­கன் விளக்­கி­னார்.

"எழுத்­து­பூர்­வ­மாக பதி­ல­ளிப்­பது, அதை சுருக்­க­மா­கத் தெரி­விப்­ப­தன் மூலம் ரஷ்­யா­வும் எங்­கள் நிலையை தெள்ளத் தெளிவாக அறிந்­து­கொள்ள உத­வியாக இருக்கும். இனி பிரச்­சி­னை­யில் முடிவு எடுக்க வேண்­டி­யது ரஷ்­யா­தான்," என்­றும் அவர் சொன்­னார்.

கிழக்கு ஐரோப்­பிய நாடு­க­ளி­லி­ருந்து துருப்­பு­கள், ஆயு­தங்­களை மீட்­டுக்­கொள்­வது, உக்­ரேனை நேட்­டோ­வில் சேர்த்­துக்­கொள்­ளா­தது போன்­றவை நடக்­காத ஒன்று.

ஆனால், ஆயு­தக் கட்­டுப்­பாடு, நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­தும் நட­

வ­டிக்­கை­கள் போன்­றவை குறித்து விவா­திக்­கத் தயார் என அமெ­ரிக்கா தெரி­வித்­துள்­ள­தாக தக­வ­ல­றிந்த வட்­டா­ரங்­களை மேற்­கோள் காட்டி ராய்ட்­டர்ஸ் தக­வல் தெரி­கிறது.