மியன்மார் குறித்து விவாதிக்க ஐநா பாதுகாப்பு மன்றம் கூடுகிறது

மியன்மார் குறித்து விவாதிக்க ஐநா பாதுகாப்பு மன்றம் கூடுகிறது

1 mins read
85b52b1c-4231-49f6-897f-3254575511b5
-

ஐநா: மியன்­மா­ரில் ராணு­வப் புரட்சி ஏற்­பட்டு ஓராண்டு ஆகி­யுள்ள நிலை­யில் அங்கு நில­வும் குழப்­ப­மான சூழல் குறித்து விவா­திக்க ஐக்­கிய நாடு­கள் சபை­யின் பாது­காப்பு மன்­றம் இன்று கூடு­கிறது. இதில் ஆசி­யான் அமைப்­புக்கு தற்­பொ­ழுது தலைமை ஏற்­றுள்ள கம்­போ­டிய அர­சாங்­கத்­தின் அமைச்­சர் ஒரு­வ­ரும் பங்­கேற்­பார் என்று கூறப்­ப­டு­கிறது.

ஐநா­வுக்­கான மியன்­மார் சிறப்­புத் தூதரை கம்­போ­டிய வெளி­யு­றவு அமைச்­சர் பாக் சோக்­கோன் தனி­யாக சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­து­வார் என்று தக­வ­ல­றிந்த வட்­டா­ரங்­களை மேற்­கோள் காட்டி ஏஎ­ஃப்பி செய்­தித் தக­வல் தெரி­விக்­கிறது.

இவ்­வாண்டு ஜன­வரி மாதம் மியன்­மா­ருக்கு கம்­போ­டிய பிர­த­மர் ஹுன் சென் பய­ணம் மேற்­கொண்­டார். இது பெரிய சர்ச்­சை­யைக் கிளப்­பி­யது. மியன்­மா­ரில் ராணு­வப் புரட்சி ஏற்­பட்டு ஆட்சி அதி­கா­ரத்தை ராணுவ ஆட்சி மன்­றம் கைப்­பற்­றிய பின்­னர் அங்கு சென்ற முதல் வெளி­நாட்­டுத் தலை­வர் ஹுன் சென் ஆவார்.

அவ­ரு­டைய இந்தப் பய­ணம் குறித்து வெளி­யு­றவு அமைச்­சர், ஐநா சிறப்­புத் தூத­ருக்கு விளக்­கம் அளிப்­பார் என்று தெரி­வ­தாக செய்­தித் தக­வல்­கள் கூறு­கின்­றன. மியன்­மார் பிரச்­சினை குறித்து ஆசி­யான் அமைப்­பில் மாறு­பட்ட கருத்து நில­வு­கிறது.

திரு ஹுன் சென்­னின் பய­ணம் மியன்­மார் ராணுவ ஆட்­சிக்கு அங்­கீ­கா­ரம் அளிப்­பதுபோல் உள்­ள­தாக அர­சி­யல் விமர்­ச­கர்­கள் கூறு­கின்­ற­னர்.