தடையால் குறைந்த தேவை; பூக்களை எரிக்கும் விவசாயிகள்

தடையால் குறைந்த தேவை; பூக்களை எரிக்கும் விவசாயிகள்

1 mins read
19755b7f-458c-43a8-93be-cd32664c32ca
-

சீனப் புத்தாண்டு கொண்டாட்ட காலத்திலும் கிருமிப் பரவல் காரணமாக ஹாங்காங் விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகளால் விவசாயிகளும் வர்த்தகர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கிருமிப் பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக பூக்களின் தேவை பரவலாக குறைந்துவிட்டது.

இந்நிலையில், சீனப் புத்தாண்டின்போது வழக்கமாக நடைபெறும் மலர் கண்காட்சிக்குத் தடை விதிப்பதாக ஹாங்காங் இம்மாதம் 14ஆம் தேதி அறிவித்தது. எனவே, விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த பூக்களை விற்க முடியாமல், அவற்றை எரித்து, தங்களின் விவசாயத்திற்கே மீண்டும் உரமாக பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

படம்: ராய்ட்டர்ஸ்