கோலாலம்பூர்: 2005ஆம் ஆண்டிற்குப் பிறகு பிறந்தவர்கள் சிகரெட், புகையிலை பொருள்களைப் பயன்படுத்த தடை விதிப்பதற்கு மலேசியா திட்டமிட்டு வருவதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதின் சொன்னார்.
ஜெனிவாவில் நடைபெற்ற உலகச் சுகாதார நிறுவனத்தின் நிர்வாக உறுப்பினர்கள் சந்திப்பில் பேசிய அவர், இத்திட்டம் இவ்வாண்டு சட்டமாக்கப்படும் என்று நம்புவதாக சொன்னார்.
இதன்படி, 2005ஆம் ஆண்டிற்குப் பிறகு பிறந்தவர்களுக்கு சிகரெட், புகையிலைப் பொருள்களை விற்பது சட்டவிரோதமாக்கப்படும் என்றார் அவர். தொற்றுநோய் அல்லாத நோய்களைத் தடுப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் சொன்னார்.
பதினைந்து, அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்களில் கால்வாசி பேருக்குப் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளதாக மலேசியாவின் 2020ஆம் ஆண்டு அறிக்கை கூறியது.
புகைப்பிடித்தல் தொடர்பில் மலேசியாவில் ஒவ்வோர் ஆண்டும் 27,200க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் அவர்களில் 15% விழுக்காட்டினர் புகைப்பிடிப்பவர்களுக்கு அருகில் இருந்தவர்கள் என்றும் சுகாதார அமைச்சின் தகவல் கூறுகி
றது.
2024ஆம் ஆண்டு முதல் இளையர்களுக்குப் புகையிலைப் பொருள்கள் விற்க தடை விதிப்பதாக நியூசிலாந்தும் ஏற்கெனவே அறிவித்துள்ளது.