மலேசியாவில் சென்ற மாதம் பேரழிவை ஏற்படுத்திய கனமழை, வெள்ளம் காரணமாக 6.1 பில்லியன் ரிங்கிட்
(2 பில்லியன் வெள்ளி) இழப்பு ஏற்பட்டுள்ளதாக மலேசிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. மிகவும் பாதிக்கப்பட்ட சிலாங்கூர் மாநிலம், ஒட்டுமொத்த பாதிப்பில் கிட்டத்தட்ட பாதியளவு இழப்பைச் சந்தித்துள்ளது.
வடகொரியா
2 பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை, கடலில் செலுத்தியதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்தது. இந்த மாதத்தில் வடகொரியா நடத்திய 6வது ஏவுகணை சோதனை இதுவாகும்.
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு ஐநா சபையின் மனித உரிமைகள் தலைவர் ஸின்ஜியாங்கிற்குச் செல்ல சீனா ஒப்புக் கொண்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன. அங்கு மனித உரிமைகள் மீறப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து ஐநா அங்கு செல்கிறது.
மடகாஸ்கர், மொஸாம்பிக், மலாவி ஆகிய தென் ஆப்பிரிக்க நாடுகளில் வீசிய அனா சூறாவளியால் கிட்டத்தட்ட 77 பேர் மாண்டுவிட்டனர்.

