பாரிஸ்: ஓமக்ரான் கிருமிப்பரவலை முறியடிக்கும் சிகிச்சை முறைகளை அதிகரிக்கும் முயற்சியாக, ஃபைசர் நிறுவனத்தின் கொவிட்-19 மாத்திரையைப் பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றிய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கி உள்ளது. இதனையடுத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பாக்ஸ்லோவிட் மாத்திரைகளை வாங்கலாம்.
கிருமித்தொற்றால் மோசமாகப் பாதிக்கப்படும் அபாயமுள்ள பெரியவர்களுக்குச் சிகிச்சையளிக்க அந்த மாத்திரையைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

