தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியா-சிங்கப்பூர் விடிஎல் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பேச்சுவார்த்தை

1 mins read
4a217035-4032-4ea0-a361-28635d26d026
-

கோலா­லம்­பூர்: சிங்­கப்­பூர், மலே­சியா ஆகிய இரு நாடு­க­ளுக்­கும் இடையே, 'விடி­எல்' எனும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான பய­ணத்­த­டத்­தின் கீழ் மேலும் அதி­க­மா­னோரை அனு­ம­திப்­பது குறித்து பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்டு வரு­வ­தாக மலே­சி­யா­வுக்­கான சிங்­கப்­பூர் தூதர் வனு கோபால மேனன் சொன்­னார்.

ஆனால், அது இரு நாடு­க­ளின் கிரு­மிப் பர­வல் சூழ­லுக்கு உட்­பட்­ட­தாக இருக்­கும் என்ற அவர், வரும் மாதங்­களில் அந்த எண்­ணிக்கை அதி­க­ரிக்­கப்­படும் என்று நம்­பு­வ­தாக சொன்­னார்.

சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­வின் கோலா­லம்­பூர் விமான நிலை­யத்­திற்­கும் இடையே சென்ற நவம்­பர் மாதம் 'விடி­எல்' திட்­டம் அறி­மு­கம் செய்­யப்­பட்­டது. ஜோகூர் கடற்­பா­லம் வழி­யான நில­வழி 'விடி­எல்' திட்­ட­மும் அப்­போது அறி­மு­கம் கண்­டது.

ஆனால், ஓமிக்­ரான் கிரு­மிப் பர­வல் கார­ண­மாக, இத்­திட்­டத்­தின் கீழ் டிக்­கெட்­டு­கள் விற்­பனை செய்­வதை டிசம்­பர் 23ஆம் தேதி முதல் இம்­மா­தம் 20ஆம் தேதி வரை நிறுத்­தி­வைப்­ப­தாக இரு­நா­டு­களும் அறி­வித்­தன.

இம்­மா­தம் 21 முதல் 'விடி­எல்' திட்­டத்­தின்­கீழ் விமான, நில­வ­ழிப் பய­ணத்­திற்­கான டிக்­கெட் விற்­பனை, முன்பு நிர்­ண­யிக்­கப்­பட்­ட­தில் இருந்து 50 விழுக்­கா­டாக குறைக்­கப்­பட்­டுள்­ளது.

"அடுத்­த ­கட்­ட­மாக, 50 விழுக்­காடு என்ற தற்­போ­தைய எண்­ணிக்­கையை அதி­க­ரிக்க முடி­யுமா என்­ப­தைப் பார்க்­க­வேண்­டும்.

"அல்­லது மீண்­டும் 100 விழுக்­காட்­டிற்­குக் கொண்டு வர­மு­டி­யுமா என்­பது தெரி­ய­வில்லை. ‌சூழ்­நி­லை­கள் எவ்­வாறு மாறு­கின்­றன என்­ப­தைப் பார்க்க வேண்­டும்," என்று பெர்­னா­மா­விற்கு அளித்த பேட்­டி­யில் மேனன் சொன்­னார்.