தனிமைப்படுத்தல் இல்லாத பயணம்: பிலிப்பீன்ஸ் அனுமதி

தனிமைப்படுத்தல் இல்லாத பயணம்: பிலிப்பீன்ஸ் அனுமதி

1 mins read
11f7c8ac-9a8d-4981-8247-7e344ca2b355
-

மணிலா: அடுத்த மாதம் முதல் சிங்­கப்­பூர் உள்­ளிட்ட 150 நாடு­களில் இருந்து பிலிப்­பீன்ஸ் செல்­லும் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பய­ணி­கள் தனி­மைப்­ப­டுத்­திக் கொள்ள தேவை­யில்லை என்று அந்­நாடு அறி­வித்­துள்­ளது.

அங்கு ஓமிக்­ரான் கிரு­மிப் பர­வல் சற்று குறை­யத் தொடங்­கி­யுள்­ள­தைத் தொடர்ந்து இந்­ந­ட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ள­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர்.

பிலிப்­பீன்­சில் ஏற்­பட்­டுள்ள தொற்று சம்­ப­வங்­கள் சமூ­கப் பரவல் என்­றும் வெளி­நாட்டிலிருந்து வந்­த­வர்­க­ளால் ஏற்­பட்டவை அல்ல என ஆய்­வு­கள் கூறு­வ­தாக சுகாதார அமைச்­சர் சொன்­னார்.

அத்துடன் உலகின் எல்லா இடங்களிலும் ஓமிக்ரான் கிருமி பரவியுள்ளதால், பயணத் தடையால் எந்தப் பலனும் இல்லை என்றும் அவர் சொன்னார். நேற்று அங்கு 18,000 பேர் தொற்றுக்கு ஆளாகினர். 10 நாட்களுக்கு முன் கிட்டத்தட்ட 40,000 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின.