நீண்ட சீனப் புத்தாண்டு விடுமுறையின் போது 1000க்கும் மேற்பட்ட பொது மருந்தகங்கள் திறந்து இருக்கும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவற்றில் 300க்கும் அதிகமான பொது மருந்தகங்கள் கொவிட்-19 தொற்றுப் பரிசோதனை செய்யக்கூடியவை.
இருமல், சளி, தொண்டை வலி, காய்ச்சல், போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் தங்கள் வீட்டின் அருகில் உள்ள பொது மருந்தகங்களுக்குச் செல்லுமாறு அமைச்சு அறிவுறுத்தியது.
இதோடு 11 கொவிட்-19 பரிசோதனை நிலையங்கள் விடுமுறையின் போது திறந்திருக்கும்.

