ரஷ்யா மக்கள்தொகையில் சென்ற ஆண்டு ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் குறைந்துவிட்டதாக புள்ளிவிவர நிறுவனமான ரோஸ்டாட் கூறுகிறது.
ரஷ்யாவின் வரலாற்றில் இந்த அளவுக்கு வீழ்ச்சி ஏற்பட்டதில்லை என்றும் கூறப்படுகிறது.
குறிப்பாக, 660,000 பேர் கிருமித்தொற்றால் மாண்டுவிட்டனர். இது மக்கள்தொகை குறைந்ததற்கு முக்கிய காரணமாகக் கூறப்பட்டது.
2020ஆம் ஆண்டிலும் ரஷ்யாவின் மக்கள்தொகை அரை மில்லியனுக்கும் மேல் குறைந்தது.
இதற்கிடையே, கிருமித்தொற்று காரணமாக ரஷ்ய அரசாங்கத்தின் இணையத்தளம் 329,443 பேர் மாண்டுவிட்டதாக கூறுகிறது.
ஆனால், ரோஸ்டாட்டின் புள்ளிவிவரமோ, அதேபோல் இரண்டு மடங்கு மக்கள் மாண்டுவிட்டதாகக் கூறுகிறது.

