சொந்த மண்ணில் கிண்ணம் வென்றார் அ‌ஷ்லிக் பார்ட்டி

சொந்த மண்ணில் கிண்ணம் வென்றார் அ‌ஷ்லிக் பார்ட்டி

1 mins read
2384b517-22f0-4024-88ff-971c008bb595
-

மெல்­பர்ன்: ஆஸ்­தி­ரே­லிய பொது­வி­ருது டென்­னிஸ் தொட­ரின் பெண்­கள் ஒற்­றை­யர் ஆட்­டத்­தில் ஆஸ்­தி­ரே­லிய வீராங்­கனை அஷ்­லிக் பார்ட்டி பட்­டம் வென்­றுள்­ளார்.

இதன்­மூ­லம் 42 ஆண்­டு­க­ளுக்குப் பிறகு முதல்­மு­றை­யாக தங்­க­ளது சொந்த நாட்­டில் நடக்­கும் கிராண்ட் ஸ்லாம் போட்­டி­களில் பட்­டம் வென்ற முதல் வீராங்­கனை என்ற பெரு­மையை இவர் பெற்­றுள்­ளார்.

1980ல் ஆஸ்திரேலியாவின் கிறிஸ் ஓ நெயில் என்பவரே ஆஸ்திரேலிய பொதுவிருது பட்டத்தை வென்றிருந்தார்.

நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் டேனியல் கொலின்ஸை எதிர்கொண்டார் பார்ட்டி.

ஒரு மணி நேரம் 27 நிமிடம் நீடித்த இப்போட்டியில் காலின்ஸ் கடும் சவால் அளித்த போதிலும் இறுதியில் 6-3, 7-6 என்ற ஆட்டகணக்கில் பார்ட்டி அவரைப் போராடி வீழ்த்தினார்.

பார்ட்டிக்கு இது மூன்றாவது கிராண்ட் ஸ்லாம் வெற்றியாகும்.

இதற்கு முன்னதாக 2019ல் பிரெஞ்சு பொதுவிருது, 2021ல் விம்பிள்டன் என இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் பார்ட்டி வென்றுள்ளார். படம்: ஏஎஃப்பி