பீதியை தூண்ட வேண்டாம்: உக்ரேன் அதிபர்

பீதியை தூண்ட வேண்டாம்: உக்ரேன் அதிபர்

1 mins read
aa9c593c-ea21-4211-87e8-36370dcfc66c
-

கீவ்: உக்­ரேன் எல்­லை­யில் ர‌ஷ்­யப் படை­கள் குவிக்­கப்­பட்­டுள்­ள­தற்கு மத்­தி­யில், மேற்­கத்­திய தலை­வர்­கள் பதற்­றத்­தைத் தூண்­ட­வேண்­டாம் என்று உக்­ரே­னிய அதி­பர் வோலோ­டி­மிர் ஜெலென்ஸ்கி கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

இந்­தப் பதற்­றம் தங்­க­ளது நாட்­டின் பொரு­ளா­தா­ரத்­தைப் பாதிக்­கும் என்று செய்­தி­யா­ளர் சந்­திப்பு ஒன்­றில் அவர் சொன்­னார்.

பிரெஞ்சு அதி­பர் இமா­னு­வெல் மேக்­ரா­னுக்கும் ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டி­னுக்­கும் இடை­யே­யான தொலை­பேசி உரை­யா­ட­லுக்­குப் பிறகு அவர் இவ்­வாறு சொன்

­னார்.

உரையாடலின்போது, பதற்­றங்­களைத் தணிப்­ப­தற்­கான பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட விருப்­பம் இருப்­பதையும் புட்­டின் உறு­திப்­படுத்­தி­னார்.

அமெ­ரிக்கா, பிரிட்­டன், ஆஸ்­தி­ரே­லியா ஆகிய நாடு­கள் உக்­ரே­னி­லி­ருந்து அர­ச­தந்­திர அதி­கா­ரி­களை மீட்­டுக்­கொண்­டது தவறு என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

உக்­ரே­னிய மக்­கள் பல ஆண்டு­க­ளாக ர‌ஷ்ய படை­யெ­டுப்பு குறித்த அச்­சு­றுத்­த­லில் வாழ்ந்து வரு­கி­றார்­கள் என்­ப­தை­யும் அவர் சுட்­டி­னார்.

அதே சம­யம், தங்­கள் நாட்­டின் மீது படை­யெ­டுக்­கும் எண்­ணம் இல்லை என்­ப­தை­யும் ர‌ஷ்யா நிரூ­பிக்க வேண்­டும் என்­றும் உக்­ரேன் அதி­பர் சொன்­னார்.

இதற்­கி­டையே, உக்­ரேன் மீது ர‌ஷ்யா படை­யெ­டுத்­தால் அது பயங்­க­ர­மா­ன­தாக இருக்­கும் என்­றும் அத­னால் அதிக உயி­ரி­ழப்­பு­கள் ஏற்­படும் என்­றும் அமெ­ரிக்க ராணுவத் தள­பதி மார்க் மில்லி கூறியுள்ளார்.