உலகம் முழுவதும் 10 பில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன

உலகம் முழுவதும் 10 பில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன

1 mins read
4c30c390-8c02-4f5d-9b32-3fd223b93431
-

உல­கம் முழு­வ­தும் 10 பில்­லி­யன் கொவிட்-19 தடுப்­பூ­சி­கள் போடப்­பட்­டுள்­ள­தாக ஆக்ஸ்­ஃபர்ட் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் தர­வு­கள் கூறு­கின்­றன.

அதா­வது இவற்­றைக் கொண்டு உல­கில் உள்ள 7.9 பில்­லி­யன் மக்­க­ளுக்கு ஒரு தடுப்­பூ­சி­யை­யா­வது போட்­டி­ருக்­க­லாம்.

ஆனால் உல­க­மக்­கள் அனை­வருக்­கும் தடுப்­பூ­சி­கள் சம­மா­கச் சென்று சேர­வில்லை.

உல­கின் பணக்­கார நாடு­களில் 77 விழுக்­காட்டு மக்­கள் குறைந்­தது ஒரு தடுப்­பூ­சி­யா­வது போட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

ஆனால் வசதி குறைந்த நாடு­களில் பத்து விழுக்­காட்டு மக்­க­ளுக்­கு முதல் தடுப்­பூ­சியே போடப்­ப­ட­வில்லை.

இதற்­கி­டையே, வட அமெ­ரிக்கா, ஐரோப்­பிய நாடு­கள் கூடு­தல் தடுப்­பூசி திட்­டத்தை விரைந்து செயல்­ப­டுத்தி வரு­கின்­றன. சில நாடு­கள் நான்­கா­வது தடுப்­பூ­சி­யை­யும் போடத் தொடங்­கி­யுள்­ளன.

அதே வேளை­யில் ஆப்­ரிக்­கா­வி­லும் சில ஆசிய நாடு­க­ளி­லும் பலர் முதல் தடுப்­பூ­சிக்­காக காத்­தி­ருக்­கின்­ற­னர். எல்லா தடுப்­பூ­சி­க­ளின் செயல்­தி­ற­னும் ஒரே­மா­தி­ரி­யாக இல்லை.

தடுப்­பூ­சி­களில் உள்ள ஏற்­ற­தாழ்­வி­னால், கிருமி தொடர்ந்து பர­வும் சூழ­லும் புதுக் கிருமி வகை­களும் ஏற்­படும் சாத்­தி­ய­மும் அதி­க­ரித்­துள்­ள­தாக ஆய்­வா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.