பைடன் செல்லவிருந்த பாதையில் பாலம் இடிந்து விழுந்தது

பைடன் செல்லவிருந்த பாதையில் பாலம் இடிந்து விழுந்தது

1 mins read
1920f7a9-2c11-4736-975d-d7507b770d14
பனிப்பொழிவு காரணமாக பிட்ஸ்பர்க்கில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழப்பு இல்லை.10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. படம்: ஏஎஃப்பி -

வா‌ஷிங்­டன்: அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் செல்­ல­வி­ருந்த பாதை­யில் அமைந்­தி­ருந்த பாலம் ஒன்று பிட்ஸ்­பர்க்­கில் இடிந்து விழுந்­தது.

இடிந்து விழுந்த பாலத்­தின் இடி­பா­டு­களில் சில வாக­னங்­கள் சிக்கி­யி­ருந்­ததை சமூக ஊட­கங்­களில் வெளி­யான புகைப்­ப­டங்­கள் காட்டின. இந்த விபத்­தில் 10 பேர் லேசாக காய­ம­டைந்­த­னர். உயிரிழப்பு இல்லை.

இது பனிப்­பொ­ழி­வால் நேர்ந்த விபத்து என்ற சம்­ப­வத்தை நேரில் கண்ட ஒரு­வர், பைடன் வர­வி­ருந்த நேரத்­தில் இந்த விபத்து ஏற்­பட்­டது தற்­செ­ய­லா­னது என­வும் சொன்னார்.

அமெ­ரிக்­கா­வின் உள்கட்டமைப்பு, பொருள் விநி­யோ­கம் ஆகி­ய­வற்றை வலுப்­ப­டுத்­து­வது குறித்து பேசு­வ­தற்கு முன்­னர், பிட்ஸ்­பர்க்­கில் உள்ள 'மில்16' எனும் ஆய்வு மையத்­திற்கு பைடன் செல்ல திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது.