வடகொரியா மிகப்பெரிய ஏவுகணை சோதனை

வடகொரியா மிகப்பெரிய ஏவுகணை சோதனை

1 mins read
b9139f6b-1e0c-42f9-b782-2e09e5d47af0
-

சோல்: வட­கொ­ரியா கடந்த ஐந்­தாண்­டு­களில் மிகப்­பெ­ரிய ஏவு­கணை சோத­னையை நேற்று நடத்தி­யுள்­ளது.

இம்­மா­தம் வட­கொ­ரியா நடத்தி­யுள்ள ஏழா­வது ஏவு­கணை சோதனை இது என்­ப­தும் குறிப்­பிடத்­தக்­கது.

நடுத்­தர தொலைவு இலக்­கு­களைத் தாக்கி அழிக்­கும் ஏவு­கணை வட­கொ­ரி­யா­வின் கிழக்கு கடற்­க­ரை­யி­லி­ருந்து விண்­ணில் ஏவப்­பட்­ட­தாக தென்கொரியா தெரி­வித்­துள்­ளது.

நவம்­பர் 2017க்குப் பிறகு வட­கொ­ரியா இப்­போ­து­தான் இவ்­வ­ளவு பெரிய ஏவு­கணை சோத­னையை மேற்­கொண்­டுள்­ள­தா­க­வும் தென் கொரி­யா­வின் தேசிய பாது­காப்பு சபை தெரி­வித்­துள்­ளது.

இந்த ஏவு­கணை 2,000 கிமீ உய­ரத்தை எட்­டி­ய­தா­க­வும் 800 கிமீ தூரத்தை 30 நிமி­டங்­களில் கடந்து, ஜப்­பான் கட­லில் இறங்­கி­யது என்­றும் ஜப்­பா­னிய, தென் கொரிய அதி­கா­ரி­கள் கூறி­யுள்­ள­னர்.

கண்­டம் விட்டு கண்­டம் பாயும் ஏவு­க­ணை­களை சோதிப்­ப­தற்­கான சுய தடையை, வட­கொ­ரியா கிட்டத்­தட்ட கைவிட்­டு­விட்­டதை இது காட்­டு­வ­தாக தென்­கொ­ரிய அதி­பர் மூன் ஜே இன் சொன்­னார்.

இந்த மாதம் வட­கொ­ரியா நடத்தி­வ­ரும் தொடர் ஏவு­கணை சோத­னை­கள், 2017ஆம் ஆண்­டில் நில­விய உச்­ச­கட்ட பதற்­றத்தை நினைவூட்­டு­வ­தா­க­வும் அவர் சொன்­னார்.

வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னோ, தனது நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் இந்த ஏவுகணை சோதனைகளை மேற்கொள்வதாக கூறுகிறார்.