கோலாலம்பூர்: சீனப் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு மலேசியாவில் மக்கள் பலரும் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதால் அந்நாட்டின் பிரதான நெடுஞ்சாலைகளில் நேற்று முன்தினம் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது. அன்றைய நாளில் ஏறக்குறைய 4.6 மில்லியன் வாகனங்கள் சென்றதாகக் கூறப்படுகிறது.
சீனப் புத்தாண்டிற்கு இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில், நேற்றும் இன்றும் கூடுதலான வாகனங்கள் சாலைகளில் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசிய சீனர்கள் தங்களது சொந்த ஊர்களில் புத்தாண்டைக் கொண்டாடுவது ஈராண்டுகளில் இதுவே முதன்முறை. கிருமிப் பரவல் காரணமாக, கடந்த ஆண்டு சீனப் புத்தாண்டு காலத்தில் மலேசியாவில் மாநிலங்களுக்கு இடையே பயணத் தடை இருந்தது.

