யங்கூன்: மியன்மாரில் ராணுவப் புரட்சி ஏற்பட்டு, இன்றோடு ஓராண்டு ஆகியுள்ள நிலையில், அங்கு மனிதாபிமான உதவிக்கான தேவை பெருமளவில் அதிகரித்து வருகிறது என்று மியன்மார் மனித உரிமைகளுக்கான ஐநாவின் சிறப்பு அதிகாரியான தாமஸ் ஆண்ட்ரூஸ் சொன்னார்.
"மியன்மாரின் நிலைமை மிகவும் மோசமடைந்து வருகிறது. மனிதாபிமான உதவிகள் கிடைப்பதில் குறிப்பிடத்தக்க சவால்கள் உள்ளன," என்றார் அவர்.
சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கயா, கயின் மாநிலங்களில் ராணுவப் படைக்கும் உள்ளூர் ஆயுதப் படைகளுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளதாக ஐநா அண்மையில் கூறியிருந்தது.
சென்ற ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு மட்டும் கிட்டத்தட்ட 181,400 பேர் தங்கள் வசிப்பிடங்களைவிட்டு வெளியேறியுள்ளனர்.

