அமெரிக்காவில் 'நார் ஈஸ்டரின்' மோசமான பனிப்பொழிவு

அமெரிக்காவில் 'நார் ஈஸ்டரின்' மோசமான பனிப்பொழிவு

1 mins read
8b3e8340-f7df-4905-8eeb-05f1e0477bf2
-

அமெரிக்காவின் கிழக்குப் பகுதிகளை மிகமோசமான பனிப்புயல் தாக்கியது. காற்றழுத்த மண்டலத்தில் மிக விரைவாக தீவிரமடைந்த இந்த பனிப்புயல் 'வெடிகுண்டு சூறாவளியாக' உருவெடுத்ததாக தேசிய வானிலை மையம் கூறியது. நியூயார்க், மேசசூசட்ஸில் ஏறக்குறைய 75 செ.மீ. (2.5 அடி) உயரம் வரை பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அங்கு 95,000க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது. 'நார் ஈஸ்டரின்' மோசமான பனிப்பொழிவு கடந்துவிட்டது என்றாலும், ஆபத்தான குளிர்காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. கடுமையான பனிப்புயலின்போது மக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு மாநில அரசாங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளபோதும், மேசசூசட்ஸில் உள்ள சார்லஸ் ஆற்றின் குறுக்கே சிலர் பனிச்சறுக்குச் சென்றனர். படம்: ராய்ட்டர்ஸ்