நியூயார்க்: போலி தடுப்பூசி சான்றிதழ்களை விற்று, 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் (2 மில்லியன் வெள்ளி) வசூலித்ததாக அமெரிக்காவின் லாங் ஐலண்டில் தாதியர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நியூயார்க் தடுப்பூசி தகவல் களஞ்சியத்தில் தவறான விவரங்களை அளித்து, தடுப்பூசி போடாதவர்களுக்கு, தடுப்பூசி போட்டுக் கொண்டதாகப் போலி சான்றிதழ் வழங்கப்பட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர். இதுதொடர்பாக மருத்துவமனை நடத்தி வரும் தாதி ஒருவரும், அங்கு பணிபுரியும் தாதி ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
போலி தடுப்பூசி சான்றிதழ் கொடுப்பதற்காகப் பெரியவர்களுக்கு
220 டாலரும் பிள்ளைகளுக்கு 85 டாலரும் வாங்கியுள்ளனர்.
துப்பறியும் நபர் ஒருவருக்கு போலி தடுப்பூசி சான்றிதழ் கொடுக்க முற்பட்டபோது, தாதியர் பிடிபட்டனர்.

