'வெளிநாட்டு செய்தியாளர்களுக்கு இடையூறு'

'வெளிநாட்டு செய்தியாளர்களுக்கு இடையூறு'

1 mins read
7d6e00b4-6564-4d2f-955c-bead32b3b7bc
-

பெய்­ஜிங்: சீனா­வில் உள்ள வெளி­நாட்டுச் செய்­தி­யா­ளர்­கள் சுதந்­தி­ர­மாக செய்­தி­களை வெளி­யி­டு­வ­தில் இது­வ­ரை­யில்­லாத அள­வுக்­குத் இடையூறுகளை எதிர்­கொள்­வ­தாக ஊட­கக் குழு ஒன்று தெரி­வித்­துள்­ளது.

சட்ட நட­வ­டிக்கை அச்­சு­றுத்­தல்­கள், இணைய எதிர்ப்பு பிரா­சா­ரங்­கள் போன்­றவை வெளி­நாட்­டுச் செய்­தி­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக 'எஃப்சி­சிசி' எனும் சீனா­வின் வெளி­நாட்­டுச் செய்­தி­யா­ளர்­கள் குழு தெரி­வித்­துள்­ளது.

வெளி­நாட்டுச் செய்­தி­யா­ளர்­களுக்கு எதி­ராக பல்­வேறு வழக்கு­கள் தொடுப்­பதை சீனா தொடர்ந்து ஊக்­கு­வித்து வரு­வதாக அக்­கு­ழு­வின் ஆண்­ட­றிக்கை கூறு­கிறது.

குழு­வின் 192 உறுப்­பி­னர்­களில் 127 பேரி­டம் நடத்­தப்­பட்ட கருத்துக்­கணிப்­பின் அடிப்­ப­டை­யில் இந்த அறிக்கை தயா­ரிக்­கப்­பட்­டுள்­

ளது.

"வெளி­யி­டப்­படும் செய்­தி­கள் தொடர்­பாக குறிப்­பிட்ட நிறு­வ­னத்­திற்குத் தடை விதிக்­கப்­ப­டக்­கூ­டும் அல்­லது அதன்­மீது சிவில் வழக்கு­கள் தொடுக்­கப்­ப­டக்­கூ­டும் என்று எச்­ச­ரிக்­கப்­ப­டு­கிறது.

"உச்­ச­க்கட்­ட­மாக தேசிய பாது­காப்பு சட்டத்தின்கீழ் விசா­ர­ணை­களுக்கு உட்­பட வேண்­டி­யி­ருக்­கும் என்­றும் செய்தி நிறு­வ­னங்­கள் எச்­ச­ரிக்­கப்­ப­டு­கின்­றன," என்­றார் தி இக்­னா­மிஸ்ட் ஊட­கத்­தின் பெய்­ஜிங் தலைமைச் செய்­தி­யா­ள­ரான டேவிட் ரென்னி.

ஆபத்­து­கள் அதி­க­மாகி வரு­வதால், சில வெளி­நாட்டுச் செய்தி­யா­ளர்­களும் அந்த நிறு­வ­னங்­களும் அவ­ச­ர­கால வெளி­யே­ற்றத் திட்­டத்தை உரு­வாக்­கி­யுள்­ள­தாக குழு­வின் அறிக்கை கூறு­கிறது.

அர­சாங்­கத்­தின் ஆத­ர­வோடு நடத்­தப்­படும் தாக்­கு­தல்­கள், குறிப்­பாக, இணைய எதிர்ப்பு பிர­சா­ரங்­கள், சீனா­வில் தொடர்ந்து நீடிக்க விரும்­பும் செய்­தி­யா­ளர்­களின் செயல்­பாட்­டைச் சிர­ம­மாக்­கு­வ­தா­க­வும் அது கூறு­கிறது.