உதவித்தொகை: 5,500 பேருக்குத் தவறுதலாக தகவல் அனுப்பிய பல்கலைக்கழகம்

உதவித்தொகை: 5,500 பேருக்குத் தவறுதலாக தகவல் அனுப்பிய பல்கலைக்கழகம்

1 mins read
c0211a71-0f31-45f6-88ac-8c9ef8448132
-

நியூ­யார்க்: கல்வி உத­வித்­தொ­கைக்­குத் தகுதி பெற்­றுள்­ள­தாக கிட்­டத்­தட்ட 5,500 மாண­வர்­க­ளுக்­குத் தவ­று­த­லாக மின்­னஞ்­சல் அனுப்­பி­விட்­ட­தாக அமெ­ரிக்­கா­வின் ஆக்­லாந்து பல்­க­லைக்­க­ழ­கம் தெரி­வித்­துள்­ளது.

நான்­காண்டு கல்­விக்­கான 48,000 டாலர் (65,000 வெள்ளி) உத­வித்­தொகை அந்த மாண­வர்­க­ளுக்­குக் கிடைக்­கும் என்று முத­லில் அனுப்­பப்­பட்ட மின்­னஞ்­ச­லில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

அடுத்த இரண்டு மணி நேரத்­திற்­குள், அது தவ­றான தக­வல் என்று இன்­னொரு மின்­னஞ்­ச­லும் மாண­வர்­க­ளுக்கு அனுப்­பப்­பட்­டது.

இதுவரை 162 மாணவர்கள் மட்டுமே உதவித்தொகைக்குத் தகுதி பெற்றுள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

நான்­காண்டு கல்வி கட்­ட­ண­மாக 58,000 டால­ரும் தங்­கு­மிட செல­வாக 11,192 டால­ரும் அந்த பல்­க­லைக்­கழகத்­தில் வசூ­லிக்­கப்­ப­டு­கிறது.