பள்ளிக்கூட தேவையைச் சமாளிக்க ஓய்வுபெற்ற ஆசிரியர்கள்

பள்ளிக்கூட தேவையைச் சமாளிக்க ஓய்வுபெற்ற ஆசிரியர்கள்

1 mins read
ceab4b78-60cb-458a-bbc6-5514e98f2ea8
-

சிட்னி: கோடை விடு­மு­றைக்­குப் பிறகு, ஆஸ்­தி­ரே­லி­யா­வின் சில மாநி­லங்­களில் பள்­ளிக்­கூ­டங்­கள் இந்த வாரம் முதல் மீண்­டும் திறக்­கப்­ப­டு­கின்­றன.

அங்கு தொற்­றுச் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை குறை­யத் தொடங்­கி­யி­ருந்­தா­லும் பள்­ளிக்­கூ­டங்­கள் எதிர்­கொள்­ளக்­கூ­டிய ஆசி­ரி­யர் பற்­றாக்­கு­றை­யைச் சமா­ளிக்­க­வும் அந்­நாடு தயா­ராக உள்­ளது.

"ஆரம்­பத்­தில் சில வாரங்­க­ளுக்­குச் சவால்­கள் இருக்­கும்," என்­றார் விக்­டோ­ரியா மாநில முதல்­வர் ஜேம்ஸ் மெர்­லினோ.

ஆசி­ரி­யர்­கள் சிலர் வேலைக்­குத் திரும்­ப­மு­டி­யா­மல் போகும்­போது, பள்­ளிக்­கூ­டங்­க­ளைத் தொடர்ந்து நடத்­து­வ­தற்கு ஏது­வாக, ஓய்­வு­பெற்ற ஆசி­ரி­யர்­கள் 350 பேர் தயார்ப்­படுத்­தப்­பட்­டுள்­ள­தாக அவர் சொன்­னார்.

பெரிய பிள்­ளை­கள் முகக்­க­வ­சம் அணி­வது கட்­ட­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது. அத்­து­டன் இல­வ­ச­மாக கொடுக்­கப்­பட்­டுள்ள ஆன்­டி­ஜென் கரு­வி­க­ளைக் கொண்டு மாண­வர்­கள் வாரத்­திற்கு இரு­முறை கிரு­மித்­தொற்று பரி­சோ­தனை செய்­ய­வேண்­டும் என­வும் உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

ஐந்து முதல் 11 வய­துக்கு உட்­பட்ட பிள்­ளை­களில் 40 விழுக்­காட்­டி­னர் முதல் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

நேற்று அங்கு 34,000 பேர் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­கி­னர். இது கடந்த ஒரு மாதத்­தில் அங்கு பதி­வான ஆகக் குறை­வான எண்­ணிக்­கை­யா­கும். நேற்று 44 பேர் கிரு­மித்­தொற்று கார­ண­மாக மாண்­ட­னர். இது இரண்டு வாரங்­களில் ஆகக் குறை­வா­கும்.