நைரோபி: மோசமான வறட்சியை அனுபவித்து வரும் ஆப்பிரிக்காவின் கென்யா, சோமாலியா. எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் ஏறத்தாழ
13 மில்லியன் மக்கள் கடும் பட்டினியால் வாடுவதாக உலக உணவுத் திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.
இப்பகுதிகளில் தொடர்ச்சியாக மூன்று மழைக்காலங்கள் பொய்த்துப் போனதால், 1981ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆக மோசமான வறட்சி நிலவுவதாக அது கூறியது.
வறட்சி காரணமாக பயிர்கள், கால்நடைகள் பெருமளவு அழித்துவிட்டதால், விவசாயத்தை நம்பியிருந்த பலர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டில் சோமாலியாவில் ஏற்பட்டதைப் போன்றதொரு நெருக்கடி மீண்டும் ஏற்படுவதைத் தவிர்க்க 'உடனடி மனிதாபிமான உதவி தேவை' என்று உணவு திட்ட அமைப்பு கூறுகிறது. சோமாலியாவில் ஏற்பட்ட வறட்சியின் போது 250,000 பேர் பட்டினியால் இறந்தனர்.
எத்தியோப்பியாவில் மட்டும் 5.7 மில்லியன் பேருக்கு உணவு தேவை என்று கூறப்பட்டுள்ளது.