கர்ப்பிணியின் தலையில் ஆணி அடித்த வைத்தியர்

கர்ப்பிணியின் தலையில் ஆணி அடித்த வைத்தியர்

1 mins read
c75cad1e-63e0-436a-85ea-20311843281c
-

கராச்சி: ஆண் குழந்தை பிறக்க பாகிஸ்தான் கர்ப்பிணியின் தலையில் ஆணியை அடித்த 'ஹீலர்' எனும் உள்ளூர் வைத்தியரை போலிசார் தேடி வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன் பெஷாவர் நகரின் வடமேற்கு பகுதியில் உள்ள மருத்துவமனைக்குச் சென்ற அந்த பெண், "ஆண் குழந்தை பிறப்பதற்காக உள்ளூர் வைத்தியர் ஒருவர் எனது தலையில் 5 செமீ அளவிலான ஆணிகள் ஐந்தை அடித்து அனுப்பினார். ஆனால் அது எனக்கு கடுமையாக வலிக்கிறது. எனவே அதை அகற்ற வேண்டும்" என்றார்.

எனவே, மருத்துவர்கள் அந்தப் பெண்ணின் தலையில் இருந்த ஆணியை அகற்றி விட்டு அனுப்பினர். போலிசார் வைத்தியரைத் தேடுகின்றனர்.