ஐந்தாண்டு போராட்டம்; டயரில் சிக்கிய முதலை விடுவிப்பு

ஐந்தாண்டு போராட்டம்; டயரில் சிக்கிய முதலை விடுவிப்பு

1 mins read
4ae769d8-f7b1-4a14-a702-ff98d1fa39a0
-

பலு: இந்­தோ­னீ­சி­யா­வில் ஐந்து ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக டய­ரில் சிக்­கிக்­கொண்­டி­ருந்த முதலை விடு­விக்­கப்­பட்டு, மீண்­டும் தண்­ணீ­ருக்­குள் விடப்­பட்­டது.

சுலா­வேசி தீவிலுள்ள பலு நக­ரில் வசிப்­ப­வர்­கள் சென்ற 2016ஆம் ஆண்டு முதலை ஒன்­றின் கழுத்­தில் மோட்­டார் சைக்­கிள் டய­ர் சுற்­றி­யி­ருப்­பதைக் கண்­ட­னர்.

அப்­போது முதல் சுற்றுச்­சூ­ழல் ஊழி­யர்­கள் முத­லையை ஆற்­றில் இருந்து இழுக்க முயன்று வந்­த­னர். ஆனால், உள்­ளூர்­வா­சி­யான 34 வயது டிலி கோழியை இறை­யா­கப் பயன்­ப­டுத்தி, மற்­ற­வர்­க­ளின் உதவியோடு முத­லை­யைக் கரைக்கு இழுத்து அதன் டயரை வெட்டி எடுத்­த­னர்.