இரண்டாண்டுகளுக்குப் பிறகு எல்லைகளைத் திறக்கிறது பிலிப்பீன்ஸ்

இரண்டாண்டுகளுக்குப் பிறகு எல்லைகளைத் திறக்கிறது பிலிப்பீன்ஸ்

1 mins read
aff67c60-954a-4ad3-b41b-f27a8df6f8fe
மணிலாவின் நினோய் அக்கினோ அனைத்துலக விமான நிலையத்தில் பயணிகள். கடந்த சில நாள்களாக கிருமித்தொற்று குறைந்து வரும் நிலையில், பிலிப்பீன்ஸ் எல்லைகளையும் பள்ளிகளையும் மீண்டும் திறக்க உள்ளது. படம்: ராய்ட்டர்ஸ் -

கடந்த சில நாள்களாக கிருமித்தொற்று குறைந்து வரும் நிலையில், பிலிப்பீன்ஸ் எல்லைகளையும் பள்ளிகளையும் மீண்டும் திறக்கிறது.

கிருமியுடன் வாழ்வதற்கான பாதுகாப்பான வழிமுறைகளை பிலிப்பீன்ஸ் மேற்கொண்டு வருகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அது வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி வழங்கி உள்ளது.

பிலிப்பீன்ஸ் வரும் பயணிகள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும்.

பரிசோதனையில் கிருமித்தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட வேண்டும்.

பயணிகள் தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

கடுமையான பொருளியல் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் பிலிப்பீன்ஸ், எல்லையை மீண்டும் திறப்பதன் மூலம் வேலைகளை மீட்டெடுக்கும்.

மீட்சிக்கான பாதையில் அடுத்த அத்தியாயத்தை பிலிப்பீன்ஸ் தொடங்கும் என்று அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் பெர்னடெட் ரோகுலோ புயாட் கூறினார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொவிட்-19 முதன்முதலில் கண்டறியப்பட்டதிலிருந்து பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டு வரும் மணிலா பெருநகரத்தில் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது பற்றியுட் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

16 நகரங்களைக் கொண்ட மணிலா பெருநகரத்தில் 13 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.